Advertisment

முத்தலாக் மசோதா இன்று தாக்கல்; அனைத்து உறுப்பினர்களுக்கும் உத்தரவு பிறப்பித்த பாஜக, காங்கிரஸ் கட்சிகள்

SDF

Advertisment

இஸ்லாம் சமூகத்தில் பின்பற்றப்படும் முத்தலாக் விவாகரத்து நடைமுறை சட்டவிரோதமானது என கடந்த ஆண்டு ஆகஸ்டில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதுதொடர்பாக நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து திருமண உரிமை பாதுகாப்பு சட்ட மசோதா கடந்த டிசம்பரில் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. ஆனால் மாநிலங்களவையில் பாஜகவுக்கு பெரும்பான்மை இல்லாததால் அந்த அவையில் மசோதா முடங்கியது. இதனையடுத்து எதிர்க்கட்சிகளின் கோரிக்கைக்கேற்ப சில திருத்தங்கள் செய்து இன்று மசோதா தாக்கல் செய்யப்படவுள்ளது. இதன்காரணமாக இன்று நடைபெறும் அவைநிகழ்வில் அனைத்து உறுப்பினர்களும் கட்டாயம் கலந்துகொள்ள வேண்டும் என பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சி கொறடாக்கள் அந்தந்த கட்சி உறுப்பினர்களுக்கு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் கூறுகையில், 'இந்த மசோதாவை நாடாளுமன்ற கூட்டுக் குழுவுக்கு அனுப்ப வேண்டும். இப்போதைய நிலையில் மசோதாவை நிறைவேற்ற விடமாட்டோம்' என கூறினார்.

congress Parliament tripletalaq
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe