Advertisment

திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏவை செருப்பால் அடித்த பொதுமக்கள்; வீடியோ காட்சி வைரல்!

Trinamool Congress MLA beaten with sandal by the public

மேற்கு வங்க மாநிலத்தில் மம்தா தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்து வருகிறது. இந்த நிலையில் அம்மாநிலத்தில் உள்ள சந்தேஷ்காலி கிராமத்தில் பட்டியலின பெண்களுக்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பிரமுகரான ஷாஜகான் ஷேக் பாலியல் தொல்லை கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அவர்களின் நிலத்தை அபகரித்து உள்ளதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது. இந்த சம்பவங்களை எல்லாம் வெளியே கூறினால் கடுமையான பின் விளைவுகளை சந்திப்பீர்கள் என்று மிரட்டல் விடுத்துள்ளார் ஷாஜகான் ஷேக்.

Advertisment

இந்த நிலையில் தான் கடந்த மாதம் ரேஷன் பொருட்கள் ஊழல் தொடர்பாக ஷாஜகான் ஷேக் வீட்டில் சோதனை நடத்த அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்றனர். அதிகாரிகளை ஷாஜகான் ஷேக் ஆதரவாளர்கள் கடுமையாகத் தாக்கினர். இதனைத் தொடர்ந்து அதிகாரிகளிடம் தப்பிய ஷாஜகான் ஷேக் தலைமறைவாக உள்ளார். இந்த நிலையில் பாதிக்கப்பட்ட சந்தேஷ்காலி கிராமத்து பெண்கள் ஷாஜகான் ஷேக் மற்றும் அவரது கூட்டளிகள் மீது போலீசில் புகார் அளித்துள்ள நிலையில், அதனை போலீசார் கண்டுகொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது.

Advertisment

இதனால் ஆத்திரமடைந்த பெண்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஷாஜகான் ஷேக்கின் கூட்டாளிக்குச் சொந்தமான கோழிப்பண்ணைகளைப் போராட்டக்காரர்கள் தீ வைத்துக் கொளுத்தினர். ஒரு மாதத்திற்கும் மேலாக போராட்டம் நடந்துவருவதால், அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. இதனால் அங்கு 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. இதனையடுத்து, மேற்கு வங்க பா.ஜ.க மாநிலத் தலைவர் சுகந்த மஜும்தார் உட்பட பா.ஜ.க.வினர், ஷாஜகான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அங்கு போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால், அங்கு தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.

அந்த வகையில், திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ ஒருவரை பொதுமக்கள் செருப்பால் அடிக்கும் வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. பெல்மஜுர் எனும் கிராமத்தை சேர்ந்த திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ அஜித் மெய்தியின் வீட்டை, அங்குள்ள பொதுமக்கள் தங்களுக்கு நீதி வழங்கக் கோரி கடந்த இரண்டு வாரத்திற்கு முன்னர் சூரையாடினர். இந்த நிலையில், இன்று (23-02-24) அது தொடர்பாக செய்தியாளர்களுக்கு அஜித் மெய்தி பேட்டி அளித்த போது, அங்குள்ள பொதுமக்கள் ஆத்திரமடைந்து தங்களது செருப்பால் அடித்தும், தாக்கவும் செய்தனர். இது தொடர்பான வீடியோ தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

tmc
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe