ADVERTISEMENT

ஆளுநருக்கு எதிராக மாநிலங்களவையில் தீர்மானம் - திரிணாமூல் காங்கிரஸ் முடிவு!

12:30 PM Jan 29, 2022 | rajapathran@na…

ADVERTISEMENT

ADVERTISEMENT

பாஜக-திரிணாமூல் கட்சிகளுக்கு இடையேயான மோதல், மத்திய அரசுக்கும், மேற்கு வங்க அரசுக்கும் இடையேயான மோதலாக நடைபெற்று வருகிறது. இதன் எதிரொலியாக மேற்குவங்க ஆளுநருக்கும், மேற்குவங்க அரசுக்கும் முட்டல் மோதல் நடைபெறுவது தொடர் கதையாகிவிட்டது.

இந்தநிலையில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி, மேற்குவங்க ஆளுநர் ஜகதீப் தன்கருக்கு எதிராக பட்ஜெட் கூட்டத்தொடரில் மாநிலங்களவையில் தீர்மானம் கொண்டுவர முடிவு செய்துள்ளது. மாநிலங்களவையில் 13 உறுப்பினர்களை கொண்ட திரிணாமூல் காங்கிரஸ் கொண்டுவரும் இந்த தீர்மானம் பெரிய அளவில் எதையும் சாதிக்காது என்ற போதிலும், மேற்குவங்க ஆளுநர் மாளிகை, பாஜகவின் தலைமையகம் போல் செயல்படுவது தேசிய அளவில் விவாதிக்கப்பட வேண்டும் என்பதற்காக ஆளுநருக்கு எதிரான தீர்மானம் கொண்டுவரப்படுவதாக திரிணாமூல் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

மேலும் இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில், ஐ.ஏ.எஸ் கேடர் விதிகளில் மத்திய அரசு முன்மொழிந்துள்ள திருத்தங்களுக்கான எதிர்ப்பையும் திரிணாமூல் காங்கிரஸ் எழுப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT