மேற்குவங்கத்தில் திரிணமுல் காங்கிரஸைச் சேர்ந்த 100 எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைய பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அக்கட்சியில் சமீபத்தில் சேர்ந்த அர்ஜூன் சிங் கூறியுள்ளார்.

trinamool congress leaders to join bjp before loksabha election

Advertisment

சமீபத்தில் திரிணாமூல் கட்சியின் மூத்த தலைவரும், எம்.எல்.ஏ வுமான அர்ஜுன் சிங் சமீபத்தில் பாஜக வில் இணைந்தார். இந்நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், "திரிணாமுல் காங்கிரஸைச் சேர்ந்த மூத்த தலைவர்கள் மற்றும் 100 எம்.எல்.ஏ க்கள் பாஜகவில் இணைய தயாராக உள்ளனர். அவர்கள் அதற்காக பாஜக தலைவர்களிடம் பேச்சுவார்த்தையும் நடத்தி வருகின்றனர். சிலர் தேர்தலுக்கு முன்பே கூட இணைய வாய்ப்பிருக்கிறது. மற்றவர்கள் மக்களவைத் தேர்தலுக்கு பிறகு இணைய முடிவு செய்துள்ளனர். இதனால் மேற்குவங்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தாமலேய பாஜக ஆட்சியை கைப்பற்ற வாய்ப்புள்ளது" என கூறியுள்ளார்.