Advertisment

கோவாவில் கூட்டணி அமைத்தது திரிணாமூல் காங்கிரஸ்!

MAMATA

மேற்கு வங்கத்தில் ஆட்சியைத் தக்க வைத்துக்கொண்டுள்ள திரிணாமூல் காங்கிரஸ், தனது கிளைகளைப் பல்வேறு மாநிலங்களில் பலமாக நிறுவ முயற்சி மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், அடுத்தாண்டு தேர்தலை சந்திக்கவுள்ள கோவா மாநிலத்தையும் திரிணாமூல் குறிவைத்து வருகிறது.

Advertisment

அதன் ஒரு பகுதியாககோவா ஃபார்வேர்டு கட்சியை கோவா திரிணாமூல்காங்கிரஸோடு இணைக்க, திரிணாமூல்காங்கிரஸ் தலைமை விரும்பியது. அது முடியாமல் போகவே,கோவா ஃபார்வேர்டு கட்சியோடு கூட்டணி அமைக்க திரிணாமூல்காங்கிரஸ் முயன்றது. ஆனால் இந்த முயற்சியும் தோல்வியில் முடிந்தது.கோவா ஃபார்வேர்டு கட்சி காங்கிரஸ் கட்சியோடு கூட்டணியில் இணைந்தது.

Advertisment

இந்தநிலையில்திரிணாமூல்காங்கிரஸ்,மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சியோடு கூட்டணி அமைத்துள்ளது.கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது காங்கிரஸ் 17 இடங்களை கைப்பற்றியது. பாஜக 13 இடங்களில் மட்டுமே வென்றது. ஆயினும் பாஜகமகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சி போன்ற சிறிய கட்சிகளுடனும், சுயேச்சைகளுடனும்கூட்டணி அமைத்து ஆட்சியை கைப்பற்றியது. அதனைத்தொடர்ந்துமகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சியை சேர்ந்தசுதின் தவாலிகர்பாஜக தலைமையிலான அரசில்அமைச்சராக இருந்தார்.

அதன்பின்னர் 2019 ஆம் ஆண்டில், மனோகர் பாரிக்கர் மறைவுக்கு பிறகு கோவா அமைச்சரவையிலிருந்துசுதின் தவாலிகர் நீக்கப்பட்டார். மேலும்மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சியில் இருந்த மூன்று எம்.எல்.எக்களில்இரண்டு பேர்பாஜகவுக்கு தாவினர். இந்தநிலையில் மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சி திரிணாமூல்காங்கிரஸோடுகூட்டணி அமைத்துள்ளது.

Assembly election Goa tmc Mamata Banerjee
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe