The trilingual policy will be followed-Federal Ministry of Education Answer

Advertisment

நாடு முழுவதும்புதிய கல்விக் கொள்கையின் படி, மும்மொழிக் கொள்கையே பின்பற்றப்படும் என மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தி.மு.க.வின் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கக் கூடிய தமிழச்சி தங்கபாண்டியன்நாடாளுமன்றத்தில்பேசுகையில், இருமொழிக் கொள்கை பின்பற்றப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது குறித்து எழுப்பிய கேள்விக்கு, நாடு முழுவதும்புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் கொண்டுவரப்பட்டுள்ள மும்மொழிக் கொள்கையேபின்பற்றப்படும் என மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், மூன்றாவது மொழியாக எதைக் கற்க வேண்டும் என்பது மாநிலங்கள் மற்றும் மாணவர்களின் முடிவு எனவும்,அதேபோல் எந்த மொழியும் திணிக்கப்படாது என மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.