Advertisment

பள்ளிச் சென்ற பழங்குடியின சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த கும்பல்!

tribal girl who went to school was misbehaved by a gang

Advertisment

ஜார்க்கண்ட் மாநிலம் குந்தி மாவட்டத்தில் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவர் அங்குள்ள பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று(18.9.2024) காலை வழக்கம் போல் பள்ளிக்குச் சென்ற சிறுமி மாலை பள்ளிமுடிந்து வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது அவரை வழிமறைத்த 10 பேர் கொண்ட கும்பல் மாணவியை வலுக்கட்டாயமாக அங்கிருந்த புதருக்குள் இழுத்துச் சென்று பாலியம் வன்கொடுமை செய்துள்ளனர். 10 பேரில் 5 பேர் பள்ளி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்துச் சம்பந்தப்பட்ட சிறுமி கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபர்கள் தற்போது அடையாளம் காணப்பட்டதாகவும் விரையில் குற்றவாளிகளை கைது செய்யப்படுவார்கள் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

அண்மையில் கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர் இரவில் மருத்துவமனையிலேயே கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் தற்போது வரை நீதிகேட்டு போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் பள்ளிக்குச் சென்று வீடு திரும்பிய சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

police jharkand
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe