கேரளாவில் அரசு பேருந்தில் பயணித்த பயணி ஒருவர் தடுமாறி வெளியே விழ முயன்ற நிலையில் உடனடியாக நடத்துநர் கைகளால் தாங்கி பிடித்துக் காப்பாற்றிய சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது.
கேரளாவில் அரசு பேருந்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ள 19 நொடிகள் கொண்ட அந்த வீடியோ காட்சியில், அரசு பேருந்தில் நின்று கொண்டு பயணித்த இளைஞர் ஒருவர் எதிர்பாராத விதமாக தடுமாறி பேருந்து படிக்கட்டுகளில் கீழே விழும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனைக் கவனித்த நடத்துநர் உடனடியாகசிறிதும் அசட்டை இல்லாமல் ஸ்டைலாக ஒற்றைக் கையை நீட்டித் தாங்கி பிடித்து அவரை காப்பாற்றினார். இதுதொடர்பானசிசிடிவி காட்சிகள்தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.