Advertisment

போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் வாபஸ்

bus

நிலுவையில் உள்ள ஊதியத்தை வழங்க வலியுறுத்தி புதுச்சேரி அரசு பேருந்து ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் கடந்த ஏழு நாட்காளாக பேருந்துகளை இயக்காமல் நடத்திவந்த வேலை நிறுத்தப் போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளனர்.

Advertisment

இதனால் உள்ளூர் மற்றும் வெளிமாநிலங்களுக்கு செல்லும் பேருந்துகள் வழக்கம்போல் இயங்க தொடங்கின.

Advertisment

புதுச்சேரி அரசின் சாலை போக்குவரத்து துறை சார்பில் புதுச்சேரி மாநிலம் மற்றும் தமிழகம், கர்நாடகா, பெங்களூர் உள்ளிட்ட பிற மாநிலங்களுக்கு சுமார் 150-க்கும் மேற்பட்ட அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

அவைகளில் ஓட்டுனர்கள், நடத்துனர்கள் என 850க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

புதுச்சேரி அரசில் நிலவும் நிதி நெருக்கடி காரணமாக அவர்களுக்கு கடந்த மூன்று மாத காலமாக ஊதியம் வழங்கப்படவில்லை.

அதையடுத்து நிலுவையில் உள்ள ஊதியத்தினை வழங்க வலியுறுத்தியும், கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் ஊழியர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட வருங்கால வைப்பு நிதி, ஆயுள் காப்பீட்டு நிதி உள்ளிட்டவற்றை முறையாக செலுத்த கோரியும் தொழிலாளர்கள் கடந்த 24- ஆம் தேதி முதல் பேருந்துகளை இயக்காமல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஏழாவது நாளாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட வந்த நிலையில் தொழிற்சங்க நிர்வாகிகளுடன் அரசு அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் நிலுவையில் உள்ள 2 மாத ஊதியம் அனைத்து ஊழியர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படும், மீதமுள்ள ஒரு மாத ஊதியத்தை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து ஒருவார காலமாக நடந்த போராட்டத்தை தொழிலாளர்கள் திரும்ப பெற்று பணிக்கு திரும்பினர்.

அதனால் புதுச்சேரி மாநிலம் மற்றும் வெளிமாநிலங்களுக்கு செல்லும் அரசு பேருந்துகள் வழக்கம்போல் இயங்க தொடங்கின.

pondy withdrawn strike workers Transport bus
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe