Advertisment

காகிதங்களை சேமிக்கும் முயற்சியில் இறங்கும் ரயில்வே!

ரயில்களில் முன்பதிவு செய்தோருக்கான அறிவிப்பை ஒட்டுவதை நிறுத்த சமீபத்தில் ரயில்வே துறையில் முடிவெடுக்கப்பட்டது. தினந்தோறும் இதற்காக ஆகும் செலவைக் குறைத்து, இனி டிஜிட்டலுக்கு மாறுவதை ஊக்குவிக்கும் முயற்சியிலும் அது இறங்கியது.

Advertisment

train

அதன்படி, கடந்த சில மாதங்களுக்கு முன்பு பயணிகள் அதிகம் கூடும் சென்னை செண்ட்ரல், புதுடெல்லி, ஹஸ்ரத் நிஜாமுதீன், மும்பை செண்ட்ரல், ஹவுரா மற்றும் சீல்டா உள்ளிட்ட ரயில்நிலையங்களில் இந்த முறை முயற்சி செய்து பார்க்கப்பட்டது.

Advertisment

இந்நிலையில், வரும் மார்ச் 1ஆம் தேதி முதல் ஏ, ஏ1 மற்றும் பி வகையிலான அனைத்து ரயில்நிலையங்களுக்கு வரும் ரயில்களிலும்,இனி முன்பதிவு செய்தோரின் விவகரங்கள் ஒட்டப்படமாட்டது என ரயில்வே துறை தெரிவித்துள்ளது.

இன்னும் ஆறு மாதங்களுக்கு அனைத்து ரயில்நிலையங்களிலும் எலெக்ட்ரானிக் டிஸ்ப்ளேக்கள் வைக்கப்படும். தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்படலாம் என்பதால், கூடுதல் கவனத்துடன் செயல்படவும், தேவைப்பட்டால் காகிதத்தாலான விவரங்களை ஒட்டவும் ரயில்நிலையங்களுக்கு ரயில்வே துறை அறிவுறுத்தியுள்ளது.

பெரும்பாலும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களே ரயில் சேவையைப் பயன்படுத்தும் நிலையில், கிராமப்புற பகுதிகளில் டிஜிட்டல் போர்டுகளை அடையாளம் காண்பதற்குசிரமமாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Ayodhya Train
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe