kujjar reservation

ராஜஸ்தானிலுள்ள சவாய் மதோபாரில் குஜ்ஜார் இன மக்கள், 5% இடஒதுக்கீடு கேட்டு கடந்த வாரத்திலிருந்து ரயில் மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதனால் மூன்று இரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் 2 ரயில்கள் வேறு பாதை வழியாக இயக்கப்படுகின்றன.

முன்னதாக போராட்டம் நடைபெறும் மாவட்டத்தில் இணைய சேவையை நாளை வரை தடை செய்துள்ளது. இந்த போராட்டக் குழுவின் தலைவரான கிரோரி சிங் பைன்ஸ்லாவிடம் விரைவில் போராட்டத்தை கைவிடுமாறு அந்த மாவட்டத்தின் ஆட்சியர் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.

Advertisment