Advertisment

ரயிலுக்கு தீ வைத்த சம்பவம்; ஒருவர் கைது

Train set on fire; One arrested

Advertisment

கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியை அடுத்த எலத்தூர் என்ற இடத்தில் ஆலப்புழா கண்ணூர் விரைவு ரயிலில் தீ வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். விசாரணையில் அந்த ரயிலில் பயணித்த சிலர், பயணிகளுடன் தகராறில் ஈடுபட்ட சூழலில் ஆத்திரமடைந்தவர்கள் ரயில் பெட்டிக்கு தீ வைத்தனர். ரயிலில் தீ விபத்து ஏற்பட்டதை அறிந்த பயணிகள் சிலர் ரயில் பெட்டியிலிருந்து குதிக்க முயன்றனர். இதில் மூன்று பேர் உயிரிழந்தனர். ஒன்பது பேர் படுகாயம் அடைந்தனர்.

இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில் ரயில் பெட்டிக்கு தீ வைத்தவர்கள் தொடர்பான சிசிடிவி காட்சிகளை போலீசார் கைப்பற்றினர். அந்த காட்சிகளை வைத்து விசாரணை நடைபெற்று வருகிறது. அதேநேரம் இந்த தீ விபத்தில் பயங்கரவாத சதி இருப்பதாகவும் சந்தேகங்கள் எழுந்த நிலையில் இது தொடர்பாக தீவிரவாத தடுப்பு போலீசார், ரயில்வே போலீசார் இணைந்து விசாரணையைத் தொடங்கி இருக்கிறார்கள்.

ரயிலுக்கு தீ வைத்ததாகச் சந்தேகிக்கப்படும் நபரின் டைரி ஒன்று காவல்துறையிடம் சிக்கியது. டைரியில் ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட குறிப்புகள் கிடைத்தன. அதில் கன்னியாகுமரி, கொல்லம், திருவனந்தபுரம் ஆகிய இடங்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருந்தது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. ரயிலுக்கு தீ வைத்ததாகக் கூறப்படும் நபரின் படத்தை நேற்று காவல்துறைவெளியிட்டிருந்தது. இந்தநிலையில் இந்த சம்பவம் தொடர்பாக உத்தரப் பிரதேசம் மாநிலம் புலந்த்சாகர் மாவட்டத்தில் சைருக் சபி என்ற இளைஞரை போலீசார் கைது செய்துவிசாரித்து வருவதாகத்தகவல் வெளியாகியுள்ளது.

Kerala police Train
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe