Advertisment

ரயிலில் இருந்து தவறி விழுந்த இளைஞர்... பின்னோக்கி ரயிலை இயக்கிய ஓட்டுநர்!

ரயிலில் தவறி விழுந்த நபருக்காக ரயில் பின்னோக்கி சென்ற சம்பவம் மராட்டியத்தில் நடைபெற்றுள்ளது. மராட்டிய மாநிலம் புனேவை சேர்ந்தவர் ராகுல் பட்டேல். இவர் அப்பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவர் நேற்று மாலை அலுவலகம் முடிந்த பிறகு புறநகர் ரயிலில் பயணம் செய்து வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக ரயிலில் இருந்து கீழே விழுந்துள்ளார்.

Advertisment

அவருடன் உடன் வந்த நண்பர்கள் ரயிலின் அவசர சங்கிலியை பிடித்து இழுந்து ரயிலை நிறுத்தியுள்ளனர். மேலும் ரயிலில் இருந்த பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் அவர்கள் இந்த விஷயத்தை கூறியுள்ளார்கள். அவர்கள் ரயில் ஓட்டுநர்களிடம் இந்த செய்தியை சொல்லியிருக்கிறார்கள். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த ஓட்டுநர் ரயிலை பின்பக்கமாக இயக்கி ராகுல் விழுந்த இடத்திற்கு சென்று அவரை ரயில் ஏற்றியுள்ளார். மேலும் பாதுகாப்பு அதிகாரிகள் அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவத்தால் ரயிலில் இருந்தவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

Train
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe