கரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தாலும், இன்று முதல் டெல்லியிலிருந்து நாட்டின் முக்கிய 15 நகரங்களுக்கு பயணிகள் ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் கரோனா தாக்கம் அதிகமாக இருப்பதால் சென்னைக்கு வழக்கமாக இயக்கப்படும் ரயில்களை, இயக்க வேண்டாம் என்று மத்திய உள்துறை, ரயில்வே துறை அமைச்சருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியிருந்தார். மேலும் பிரதமருடான காணொலி உரையின்போதும் இதனை வலியுறுத்தியிருந்தார்.
இந்நிலையில் டெல்லியிலிருந்து சென்னைக்கு வரும் வெள்ளிக்கிழமை (மே 14) மற்றும் ஞாயிற்றுக்கிழமை (மே 16) ஆகிய இருதினங்களுக்கு மட்டுமே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று ரயில்வே அமைச்சகம் இன்று அறிவித்துள்ளது.