train ac coach ticket reduced by indian railway

ரயில்களில் ஏசி பெட்டிகளுக்கான கட்டணங்கள் குறைக்கப்பட்டுள்ளன.

Advertisment

வந்தே பாரத் உள்ளிட்ட அனைத்து ரயில்களிலும் 50 சதவீதத்திற்கும் குறைவான பயணிகள் பயணிக்கும் ரயில்களில் உள்ள ஏசி பெட்டிகளில் கட்டண சலுகை வழங்க ரயில்வே வாரியம் அறிவுறுத்தி உள்ளது. அதன்படி 50 சதவீதத்திற்கும் குறைவான பயணிகள் பயணிக்கும் ரயில்களில் அனைத்து சேர்கார் மற்றும் எக்ஸிகியூட்டிவ் பிரிவுகளில் 25 சதவீத அளவிற்கு கட்டணத்தை குறைக்கஉத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் இந்த கட்டண சலுகை உடனடியாக அமலுக்கு வருவதாகவும் ரயில்வே வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளது. ஏற்கனவே வந்தே பாரத் உள்ளிட்ட பல்வேறு சொகுசு ரயில்களில் கட்டணம் அதிகமாக இருப்பதாக ரயில்பயணிகள் பலரும் கருத்து தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.