Advertisment

உறக்கத்தில் நேர்ந்த சோகம்! ஆட்டோ ஓட்டுநரின் மகள் பலி! 

Tragedy in sleep! Auto driver's daughter passed away

Advertisment

புதுச்சேரி, உழவர்கரை கான்வென்ட் வீதியைச் சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் ஆரோக்கியநாதன்(53). இவரது மனைவி மரிய லூர்தியா(52). இவர்களது மகன் பிரான்கோ(28), மகள் லூர்துமேரி(16). இவர் தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இதற்கிடையே நேற்று காலை வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த மரியலூர்தியா, லூர்துமேரி ஆகியோர் உடலில் தீப்பற்றி எரிந்து அலறி துடித்தனர். அப்போது வீட்டின் மற்றொரு அறையில் இருந்த ஆரோக்கியநாதன், பிரான்கோ ஆகியோர் ஓடிவந்து அவர்களை அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மீட்டனர். அவர்களை சிகிச்சைக்காக கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக மரியலூர்தியா, லூர்துமேரி ஆகியார் புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

இதற்கிடையே நேற்று மாலை லூர்துமேரி, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மரியலூர்தியாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து ரெட்டியார்பாளையம் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் வீட்டில் கொசுபத்தியால்ஏற்பட்ட தீயில் உயிரிழந்ததாக தெரிகிறது. மேலும், காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்திவருகின்றனர்.

police Pondicherry
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe