Advertisment

பைக்கில் பட்டாசு வாங்கிச் சென்ற நபர்; திடீரென வெடித்து உயிரிழந்த சோகம்!

Tragedy of A man who bought firecrackers on a bike in andhra

Advertisment

தீபாவளி நாளில், இருசக்கர வாகனத்தில் மொத்தமாக வாங்கிச் சென்ற பட்டாசுகள் வெடித்து ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திரா மாநிலம் ஏலூர் பகுதியை சேர்ந்தவர் சுதாகர். வீட்டில் உள்ளவர்களுக்காக, பட்டாசுகளை வாங்க சுதாகர் இருசக்கர வாகனத்தில் கடைக்குச் சென்றுள்ளார். அங்கு சென்ற அவர், அதிக விலை கொண்ட பட்டாக்களை வாங்கி இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு திரும்பியுள்ளார்.

குறுகிய தெரு வழியாக சென்ற சுதாகரின் வாகனம், நிலைதடுமாறி அங்குள்ள ஒரு பள்ளத்தில் இறங்கி வாகனம் கவிழ்ந்தது. அப்போது, சுதாகர் வைத்திருந்த பட்டாசுகள் அனைத்தும் அங்கு வெடித்து சிதறின .இந்த வெடி விபத்தில், சுதாகரின் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், அந்த வழியே சென்ற ஐந்து பேர், இந்த வெடி விபத்தில் காயம் அடைந்தனர். உடனடியாக காயமடைந்த அவர்களை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வெடி விபத்து சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

incident crackers
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe