The tragedy of a lover who refused to accept love; Police investigation

காதலை ஏற்காததால் ஒருதலையாக காதலித்து வந்த இளைஞர் மாணவியை வெட்டிய நிலையில், அவரே மீண்டும் காப்பாற்ற முயன்றசம்பவம் கர்நாடகாவில் நிகழ்ந்துள்ளது.

Advertisment

கர்நாடக மாநிலம் ராம் நகர் பகுதியில் வசித்து வந்த பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும்மாணவி ஒருவரை அதே பகுதியைச் சேர்ந்த சேத்தன் (22) என்ற நபர் ஒருதலையாகக் காதலித்து வந்துள்ளார். டிரைவர் வேலை பார்த்து வந்த சேத்தனின் காதலை அந்த மாணவி ஏற்றுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. மாணவியின் காதல் விவகாரம் பெற்றோருக்குத்தெரிய வர, அவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் அந்த மாணவி இளைஞர் சேத்தனுடன் பேசுவதை நிறுத்திக் கொண்டார். இதனால், மீண்டும் தன்னிடம் பேசும்படியும்காதலை ஏற்றுக்கொள்ளும்படியும் சேத்தன் மாணவியைத்தொடர்ந்துவலியுறுத்தி வந்துள்ளார்.

மாணவிமறுப்பு தெரிவித்து வந்த நிலையில், ஆத்திரமடைந்த சேத்தன் நேற்றுமாணவி பள்ளிக்குச்சென்று கொண்டிருந்த பொழுதுகாரில் பின் தொடர்ந்து சென்று அவர் மீது மோதியுள்ளார். பின்னர் காரில் இருந்து இறங்கி, மறைத்து வைத்திருந்த அரிவாளால் மாணவியைச் சரமாரியாக வெட்ட முயன்றுள்ளார். இதைக் கண்ட பொதுமக்கள் இளைஞர் சேத்தனை பிடிக்க முயன்றுள்ளனர். அப்பொழுது மக்களையும் அரிவாளை காட்டி மிரட்டியுள்ளார்.

Advertisment

ரத்த வெள்ளத்தில் கிடந்த மாணவியைக் கண்டு மனம் மாறிய சேத்தன், தனது காரிலேயே மாணவியை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அனுமதித்தார். தொடர்ந்து போலீசார் விசாரணை செய்ததில், மாணவியை வெட்டியது சேத்தன் என்பது தெரிய வர அவரைக் கைது செய்தனர். தற்போது மாணவி மருத்துவமனையில் உயிருக்குப் போராடும் நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.