Advertisment

ஓடும் ரயிலில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த டிடிஆர்

Tragedy happened young woman train running  Uttar Pradesh ticket inspector arrested

உ.பி.யில்ஓடும் ரயிலில் இளம்பெண் ஒருவர்டிக்கெட் பரிசோதகரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

கடந்த 16 ஆம் தேதி டேராடூன்-சுபேதர்கஞ்ச் விரைவு ரயில் பொதுப் பெட்டியில் 33 வயது இளம்பெண் ஒருவர் சந்தௌசியில் இருந்து பிரயாக்ராஜ் அருகே உள்ள சுபேதர்கஞ்ச் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த டிக்கெட் பரிசோதகர் கே.என்.சிங் அந்த இளம்பெண்ணுக்குஏ.சி பெட்டியில் இருக்கை ஏற்பாடு செய்து கொடுக்க, அவரும் அதில் பயணித்து வந்துள்ளார்.

Advertisment

இதையடுத்து இரவு 10 மணியளவில் அந்த ரயில் உத்தரப் பிரதேசத்தில் அலிகார் அருகே சென்று கொண்டிருந்தபோது டிக்கெட் பரிசோதகர் கே.என்.சிங் மற்ற ஒருவருடன் சேர்ந்து அந்த இளம் பெண்ணை வலுக்கட்டாயமாக கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து நடந்த சம்பவம் குறித்து அந்தப் பெண் சந்தாசி ரயில் நிலைய போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் கே.என். சிங்கை கைது செய்த போலீசார், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மற்றொரு நபர் தப்பித்துச் சென்றுவிட்டதாகவும், அவரைத்தேடி வருவதாகவும் தெரிவித்திருக்கின்றனர். ஓடும் ரயிலில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த டிக்கெட் பரிசோதகரை இந்திய ரயில்வே பணியிடைநீக்கம் செய்துள்ளதாகத்தெரிவித்துள்ளது.

arrested police Train uttrapradesh
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe