Tragedy happened to the son and mother on the same day in telangana

தெலங்கானா மாநிலம், மெடக் மாவட்டத்தில் உள்ள குச்சன்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் நரசிங்க கவுட் (36). இவர், வாடகைக்கு கார் ஒன்றை ஓட்டி வந்தார். இவரது தாய் லட்சுமி (57). நரசிங்க கவுட்டுக்கு திருமணமாகி 2 குழந்தைகள் இருக்கின்றனர்.

Advertisment

இந்த நிலையில், இன்று (06-01-24) அதிகாலை நரசிங்க கவுட் தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதில் அதிர்ச்சியடைந்த நரசிங்க கவுட்டின் மனைவி, உடனே அவரை மீட்டு அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து, மகன் இறந்த செய்தியை வீட்டில் இருந்த தாய் லெட்சுமியிடம் கூறியபோது அதிர்ச்சியடைந்து திடீரென மயக்கம் அடைந்து கீழே விழுந்தார்.

Advertisment

உடனே, அங்கிருந்தவர்கள் லெட்சுமியை உடனே மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அங்கு லெட்சுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே மாரடைப்பால் உயிரிழந்ததாக தெரிவித்தனர். மகன் இறந்த செய்தியை கேட்டு தாயும் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.