Tragedy happened to the girl walking on the road

Advertisment

திரிபுரா மாநிலம், தர்மநகர் மாவட்டம் உப்டஹல்லி பகுதியைச் சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவர் நேற்று மாலை தனது கிராமத்தில் உள்ள சாலையில் நடந்துகொண்டிருந்தார். அப்போது, இருசக்கர வாகனத்தில் அங்கு வந்த அடையாளம் தெரியாத இரண்டு பேர், சிறுமியை கடத்திச் சென்று அருகில் உள்ள காட்டுப்பகுதிக்கு கொண்டு சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து அங்கிருந்து இருவரும் தப்பிச் சென்றுள்ளனர்.

கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி மயங்கிய நிலையில் காட்டுப்பகுதியில் கிடந்த அந்த சிறுமியை, அங்கிருந்த கிராம மக்கள் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதித்தனர். அங்கு சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து தப்பிச் சென்ற குற்றவாளிகளை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.