Advertisment

திருமணமான ஒரே மாதத்தில் இளம்பெண் தூக்குப் போட்டுத் தற்கொலை 

Tragedy befell the young woman within one month of her marriage

கேரளா மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் முள்ளில்லாவன்முடு ப நெடுமங்காடு அருவிக்கரை பகுதியைச் சேர்ந்தவர் இளம்பெண் ரேஷ்மா (29). இவருக்கும், நெடுமங்காடு அருவிக்கரை பகுதியைச் சேர்ந்த அக்சய் ராஜ் என்பவருக்கும் கடந்த ஜூன் மாதம் 12 ஆம் தேதி திருமணம் நடைபெற்றது.

Advertisment

இந்த நிலையில் ரேஷ்மாவின் கணவர் அக்சய் ராஜ் தொழில் விஷயமாக நேற்று முன் தினம் வெளியூர் சென்றிருந்தார். இதனால், ரேஷ்மா மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இதனிடையே நேற்று காலை ரேஷ்மா தூங்கிய அறை வெகு நேரமாக திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அக்சய் ராஜின் குடும்பத்தினர் கதவைத்தட்டிப் பார்த்துள்ளனர். ஆனால், அந்த அறையில் இருந்து எந்த பதிலும் வரவில்லை. அதனைத்தொடர்ந்து, அவர்கள் ரேஷ்மாவின் அறையை உடைத்து திறந்து பார்த்தபோது அங்கு ரேஷ்மா தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாகக் கிடந்தார்.

Advertisment

இதனால், அதிர்ச்சி அடைந்த அக்சய் ராஜின் குடும்பத்தினர் காவல்துறையினருக்குத்தகவல் கொடுத்தனர். அவர்கள் கொடுத்த அந்த தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு சென்ற காவல்துறையினர், பிணமாகத்தூக்கில் தொங்கிய நிலையில் இருந்த ரேஷ்மாவின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதனைத்தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அவர்கள் நடத்திய அந்த விசாரணையில், ரேஷ்மாவின் கணவர் அக்சய் ராஜ் வேறொரு பெண்ணுடன் அடிக்கடி செல்போனில் பேசி வந்துள்ளார். இதனால், தனது கணவருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக ரேஷ்மா சந்தேகப்பட்டுள்ளார். இதனால், கடுமையான மன உளைச்சலுக்குஆளான ரேஷ்மா, நேற்று தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்று காவல்துறையினருக்குத்தெரியவந்தது. திருமணமான ஒரு மாதத்தில் இளம்பெண் ஒருவர் தூக்குப் போட்டுத்தற்கொலை செய்தது அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Suicide marriage Kerala
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe