Skip to main content

திருமணமான ஒரே மாதத்தில் இளம்பெண் தூக்குப் போட்டுத் தற்கொலை 

Published on 28/08/2023 | Edited on 28/08/2023

 

Tragedy befell the young woman within one month of her marriage

 

கேரளா மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் முள்ளில்லாவன்முடு ப நெடுமங்காடு அருவிக்கரை பகுதியைச் சேர்ந்தவர் இளம்பெண் ரேஷ்மா (29). இவருக்கும், நெடுமங்காடு அருவிக்கரை பகுதியைச் சேர்ந்த அக்சய் ராஜ் என்பவருக்கும் கடந்த ஜூன் மாதம் 12 ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. 

 

இந்த நிலையில் ரேஷ்மாவின் கணவர் அக்சய் ராஜ் தொழில் விஷயமாக நேற்று முன் தினம் வெளியூர் சென்றிருந்தார். இதனால், ரேஷ்மா மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இதனிடையே நேற்று காலை ரேஷ்மா தூங்கிய அறை வெகு நேரமாக திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அக்சய் ராஜின் குடும்பத்தினர் கதவைத் தட்டிப் பார்த்துள்ளனர். ஆனால், அந்த அறையில் இருந்து எந்த பதிலும் வரவில்லை. அதனைத் தொடர்ந்து, அவர்கள் ரேஷ்மாவின் அறையை உடைத்து திறந்து பார்த்தபோது  அங்கு ரேஷ்மா தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாகக் கிடந்தார்.

 

இதனால், அதிர்ச்சி அடைந்த அக்சய் ராஜின் குடும்பத்தினர் காவல்துறையினருக்குத் தகவல் கொடுத்தனர். அவர்கள் கொடுத்த அந்த தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு சென்ற காவல்துறையினர், பிணமாகத் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்த ரேஷ்மாவின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

அதனைத் தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அவர்கள் நடத்திய அந்த விசாரணையில், ரேஷ்மாவின் கணவர் அக்சய் ராஜ் வேறொரு பெண்ணுடன் அடிக்கடி செல்போனில் பேசி வந்துள்ளார். இதனால், தனது கணவருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக ரேஷ்மா சந்தேகப்பட்டுள்ளார். இதனால், கடுமையான மன உளைச்சலுக்கு ஆளான ரேஷ்மா, நேற்று தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்று காவல்துறையினருக்குத் தெரியவந்தது. திருமணமான ஒரு மாதத்தில் இளம்பெண் ஒருவர் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்தது அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

இந்திரா காந்திக்குப் புகழாரம் சூட்டியதால் சலசலப்பு; சுரேஷ் கோபி விளக்கம்

Published on 17/06/2024 | Edited on 17/06/2024
Explained by Suresh Gopi for Uproar over praise of Indira Gandhi

சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் கேரளா மாநிலம், திருச்சூர் தொகுதியில் பா.ஜ.க சார்பில் மலையாள நடிகர் சுரேஷ் கோபி போட்டியிட்டார். இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளரை தோற்கடித்ததன் விளைவால், கேரளாவில் முதல் முறையாக பா.ஜ.க கால் பதித்தது. 

கேரளாவின் ஒரே ஒரு எம்.பியான சுரேஷ் கோபிக்கு, மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. ஒன்றிய இணையமைச்சராக பதவியேற்ற சுரேஷ் கோபி, திருச்சூரில் உள்ள மறைந்த காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் கேரள முதல்வருமான கருணாகரனின் நினைவிடத்துக்குச் சென்று மரியாதை செலுத்தினார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான ஈ.கே.நாயனார் மற்றும் கே.கருணாகரன் ஆகியோர் எனது அரசியல் குருக்கள். இந்திரா காந்தியை இந்தியாவின் தாயாகப் பார்ப்பது போல், கருணாகரனின் மனைவியை நான் அம்மா என்று தான் அழைப்பேன். 

எனது தலைமுறையில் கருணாகரனை, நான் மிகவும் மதிக்கும் துணிச்சலான தலைவர். அதனால், அவர் சார்ந்த கட்சி மீது எனக்கு ஒரு விருப்பம் இருக்கும். ஒரு இந்தியனாக, நாட்டிற்காக நிற்கும் ஒரு மனிதனாக, எனக்கு மிகத் தெளிவான அரசியல் உள்ளது. அதை உடைக்கக் கூடாது. ஆனால் மக்கள் மீது நான் வைத்திருக்கும் மரியாதை என் இதயத்திலிருந்து வருகிறது. அதற்கு நீங்கள் அரசியல் சாயம் பூசக்கூடாது. இந்திரா காந்தி ஆட்சியில் மத்திய அமைச்சராக இருந்த கே.கருணாகரன், கேரளாவுக்கு சிறந்த நிர்வாக பலன்களைப் பெற்று தந்துள்ளார்” என்று கூறினார். பா.ஜ.கவைச் சேர்ந்த சுரேஷ் கோபி, காங்கிரஸ் தலைவரையும், இந்திரா காந்தியையும் புகழ்ந்தது, பா.ஜ.கவினரிடையே பெரும் சலசலப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியது. 

இதனைத் தொடர்ந்து, சுரேஷ் கோபி கூறிய தனது கருத்துக்கு நேற்று (16-06-24) விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, “நான் என்ன சொன்னேன்? காங்கிரஸைப் பொறுத்த வரையில், யார் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் கே.கருணாகரன் தான் கேரள மாநில காங்கிரஸ் கட்சியின் தந்தை . இந்தியாவில் அதன் தாய் இந்திரா காந்தி. இதை நான் என் இதயத்திலிருந்து சொன்னேன். சுதந்திரத்திற்குப் பின் இந்தியாவின் உண்மையான சிற்பியாக இந்திரா காந்தி இருந்தார். அரசியல் போட்டிகள் கட்சியில் இருக்கிறது என்பதால் நாட்டுக்காக உண்மையாக உழைத்த ஒருவரை என்னால் மறக்க முடியாது” என்று கூறினார். 

Next Story

'வாழ்க்கையில் மறக்க முடியாத நாள்' - நெகிழ்ந்த மணமக்கள்

Published on 16/06/2024 | Edited on 16/06/2024
'Unforgettable day of a lifetime' - excited brides

வேலூர் மாவட்டம் குடியாத்தம் கல்லூர் சீனிவாசா நகர்ப் பகுதியைச் சேர்ந்த சரவணன் (35) இவர் சிறுவயதில் போலியோவால் கால்கள் செயலிழந்த நிலையில் 12ஆம் வகுப்பு வரை படித்து தற்போது தனியாக குடியாத்தம் சித்தூர் கேட் பகுதியில் சொந்தமாக டீக்கடை நடத்தி வருகிறார். குடியாத்தம் பிச்சனூர் பேட்டைப் பகுதியைச் சேர்ந்த கீர்த்தனா(22) இரண்டரை அடி உயரமே உள்ள மாற்றுத்திறனாளி ஆனவர் பிஏ பட்டப்படிப்பு படித்துள்ளார்.

சரவணனுக்கும் கீர்த்தனாவும் திருமணம் செய்ய குடும்பத்தார் வரன் தேடிவந்த நிலையில் சரவணனுக்கும் கீர்த்தனாவுக்கும் பெரியோர்களால் திருமண நிச்சயதார்த்தம் செய்யப்பட்டு, இன்று குடியாத்தம் அடுத்த சித்தூர் கேட் பகுதியில் உள்ள செல்வபெருமாள் ஆலயத்தில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது.

இதனிடையே போலியோவால் கால்களை இழந்த மணமகனுக்கும் இரண்டரை அடி உயரமுள்ள மாற்றுத்திறனாளி பெண்னுக்கும் நடைபெற்ற இந்தத் திருமணத்தில் கலந்து கொண்ட பெரியவர்கள் 'வாழ்க்கையை வாழ்வதற்கு உடல் குறைபாடு தடையில்லை நீண்ட வளமுடன் வாழ' மணமக்களை வாழ்த்தினர். மணமக்களும் தங்கள் வாழ்வில் மறக்க முடியாத நாள் இது என நெகிழ்ந்தனர்.