Advertisment

ட்ரோன் மூலம் போதைப்பொருள் கடத்தல்; சுட்டு வீழ்த்திய பெண் காவலர்களுக்கு குவியும் பாராட்டு

drug trafficking by drone; Accusations heaped on female policemen who shot them down

ட்ரோன் மூலம் சுமார் மூன்று கிலோ எடை கொண்ட போதைப் பொருட்கள் பாகிஸ்தானிலிருந்து பஞ்சாபுக்கு அனுப்பப்பட்ட சம்பவத்தில் பி.எஸ்.எஃப் பெண் காவலர்களால் ட்ரோன் சுட்டு வீழ்த்தப்பட்டது பாராட்டைப் பெற்றுள்ளது.

Advertisment

பாகிஸ்தான் எல்லையை ஒட்டி அமைந்துள்ள ஷகர்பூர் என்ற கிராமத்திலிருந்து திங்கட்கிழமை இரவு 11 மணியளவில் ட்ரோன் ஒன்று சந்தேகப்படும் வகையில் பறந்து வந்தது. அந்த நேரத்தில் அந்தப் பகுதியில் எல்லைப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பி.எஸ்.எஃப் பெண் காவலர்கள் சந்தேகப்படும் வகையில் பறந்த அந்த ட்ரோனை சுட்டு வீழ்த்தினர்.

Advertisment

இதில் 18 கிலோ எடையுள்ளஆறு ரோட்டர்களைக் கொண்ட அந்த ட்ரோனில் சுமார் மூன்று கிலோ போதைப் பொருட்கள் இருந்தது. இதனைக் கைப்பற்றிய அதிகாரிகள் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ட்ரோனை சுட்டு வீழ்த்திய பெண் காவலர்களை அதிகாரிகள் பாராட்டினர்.

Drone Pakistan police Punjab
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe