சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் வீடியோ ஒன்றில் போக்குவரத்து போலீசார் ரோட்டில் நின்று கொண்டு பைக்கில் செல்வோரின் ஹெல்மெட்களை வாங்கி தூக்கி போடுகின்றனர். முதலில் இந்த வீடியோவை பார்ப்பவர்கள் இது என்ன அராஜகம் என்று நினைக்கலாம்.ஆனால் உண்மை அது இல்லை.

Advertisment

அவர்கள் அணிந்து வந்த ஹெல்மெட்கள் அனைத்தும் வெறுமனே தலையை மறைக்கும் வகையில், தரமில்லாததாக உள்ளன. இதனால் போலீசார் அந்த ஹெல்மெட்களை வாங்கி தூக்கி போடுகின்றனர். மேலோட்டமாக பார்த்தால் இது சரியாக தோன்றினாலும், வாகன ஓட்டிகளிடம் இருந்து ஹெல்மெட்டினை வாங்கி உடைப்பது தவறு என நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர்.