பஞ்சாலைகளைத் தொடர்ந்து இயக்க வலியுறுத்தி தொழிற்சங்கங்கள் கண்டன ஆர்ப்பாட்டம்! 

Trade unions protest demanding continued operation of panchayats!

புதுச்சேரியில் உள்ள பாரதி, சுதேசி பஞ்சாலைகளை மூடும் உத்தரவை அரசு கைவிட வேண்டும், நீதிமன்ற உத்தரவுப்படி பஞ்சாலைகளில் பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு பணப்பலன்களை முழுமையாக வழங்க வேண்டும், புதுச்சேரி ஏ.எப்.டி, பாரதி, சுதேசி, ஸ்பின்கோ, மற்றும் ஜெயபிரகாஷ் நாராயண்ஆகிய பஞ்சாலைகளுக்கு தேவையான நிதி ஒதுக்கி தொடர்ந்து இயக்க வேண்டும் என வலியுறுத்தி புதுச்சேரி ஏ.ஐ.டி.யு.சி, ஐ.என்.டி.யு.சி, உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் சட்டமன்றம் அருகே இன்று (17/05/2022) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட தொழிற்சங்க நிர்வாகிகள், மத்திய அரசையும், மாநில அரசையும் கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர். மேலும் இந்த பஞ்சாலைகளை மூடுவதாக உத்தரவிட்டுள்ள அரசின் அறிவிப்பை உடனடியாக திரும்பப் பெற வேண்டும், தனியாக நிதி ஒதுக்கி பஞ்சாலைகளை இயக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.

Puducherry
இதையும் படியுங்கள்
Subscribe