Advertisment

"மீண்டும் இந்தியாவுடன் வர்த்தக உறவு?"- பாகிஸ்தான் நிதியமைச்சர்

publive-image

மழை வெள்ளத்தால் உருக்குலைந்த பாகிஸ்தான், இந்தியாவுடன் வர்த்தக உறவு மேற்கொள்ள விருப்பம் தெரிவித்த நிலையில் இந்தியப்பிரதமர் மோடி பாகிஸ்தான் நிலையை கண்டு வருந்துவதாக ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

Advertisment

பாகிஸ்தானில் தொடர் கனமழை காரணமாக இதுவரை 1100க்கும் அதிகமானோர் இறந்துள்ளனர். மேலும் அத்தியாவசியப் பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டதை இந்திய அரசு ரத்து செய்ததை கண்டித்து பாகிஸ்தான் இந்தியாவுடனான வர்த்தக உறவை முறித்துக்கொண்டது. இது தொடர்பாக இஸ்லாமாபாத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அந்நாட்டின் நிதியமைச்சர் "மூன்றாண்டுகளுக்கு முன் இந்தியாவுடனான வர்த்தக உறவு முறிக்கப்பட்டதை பாகிஸ்தான் அரசு விலக்க வேண்டும்" என கூறியுள்ளார். அவ்வாறு விலக்கினால் இந்தியாவில் இருந்து அத்தியாவசியப் பொருட்களை வரியின்றி இறக்குமதி செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

Advertisment

இதனிடையே பாகிஸ்தானில் வெள்ளப்பாதிப்பை கண்டு வருந்துவதாக மோடி தெரிவித்துள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பதிவில் "வெள்ளத்தில் உயிரிழந்தவர்கள், காயமடைந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் தெரிவித்து விரைவில் இயல்பு நிலை திரும்பும் என நம்புவதாக மோடி கூறியுள்ளார்.

modi India Pakistan
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe