Advertisment

ஒமிக்ரான் அச்சம்: இரண்டு மாநிலங்களில் 23 பேர் மாயம்!

foreigners

Advertisment

தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமிக்ரான்கரோனா, உலகின் பல்வேறு நாடுகளுக்கும் பரவிவருகிறது. இந்தியாவிலும்கர்நாடக மாநிலத்தில் இருவருக்கு ஒமிக்ரான் பாதிப்பு ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த இருவரில் ஒருவர் தென்னப்பிரிக்காவைச் சேர்ந்தவர். இன்னொருவர் அம்மாநிலத்தைச் சேர்ந்த மருத்துவர் ஆவார்.

இதில் மருத்துவர், வெளிநாடு எதற்கும்சென்றுவராதநிலையில், அவருக்கு ஒமிக்ரான் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே, நவம்பர் 12 முதல் 22ஆம் தேதி வரைக்குமான காலகட்டத்தில் கர்நாடகாவிற்கு வந்ததென்னாபிப்ரிக்கநாட்டைச் சேர்ந்த 10 பேர் மாயமாகியுள்ளனர்.

இதனையடுத்துஅவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது. இந்தச் சூழலில் கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர், மொபைல் ஃபோன்களை அணைத்துவைத்துவிட்டு யாரும் காணாமல் போகக் கூடாது. பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் என வெளிநாட்டவர்களுக்கு வேண்டுகோள் விடுவித்துள்ளார்.

Advertisment

இதற்கிடையே உத்தரப்பிரதேச மாநிலத்தின்மீரட்டுக்குவந்த 297 வெளிநாட்டவர்களில், 13 பேர் மாயமாகியுள்ளனர். அவர்கள் போலியான முகவரியையும், மொபைல் எண்ணையும் மீரட் நிர்வாகத்திடம் அளித்திருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்துஉள்ளூர் புலனாய்வு பிரிவு மாயமானவர்களைத் தேடிவருகிறது.

uttarpradesh karnataka OMICRON foreigners
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe