இந்தியாவின் டாப் 10 கோடீஸ்வரர்கள் பட்டியலை வெளியிட்ட ஃபோர்ப்ஸ்...

top 10 richest persons in india 2020

2020 ஆம் ஆண்டுக்கான இந்தியாவின் டாப் 10 கோடீஸ்வரர்கள் பட்டியலை ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ளது.

இந்த பட்டியலில் ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி தொடர்ந்து 13-வது ஆண்டாக முதலிடத்தை பிடித்துள்ளார். அவரது சொத்து மதிப்பு $88.7 பில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது இந்திய மதிப்பில் 6.50 லட்சம் கோடி ரூபாய் ஆகும். இவருக்கு அடுத்த, $25.2 பில்லியன் சொத்து மதிப்புடன் அதானி இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். $20.4 பில்லியன் சொத்து மதிப்புடன் ஹெச்.சி.எல் நிறுவனர் ஷிவ் நாடார் மூன்றாமிடத்தில் உள்ளார். இந்த பட்டியலில், ராதாகிஷன் தமானி (15.4 பில்லியன் டாலர்), இந்துஜா சகோதரர்கள் (12.8 பில்லியன் டாலர்), சைரஸ் பூனவல்லா (11.5 பில்லியன் டாலர்), பல்லோன்ஜி மிஸ்திரி (11.4 பில்லியன் டாலர்), உதய் கோடக் (11.3 பில்லியன் டாலர்), கோத்ரேஜ் குடும்பம் (11 பில்லியன் டாலர்), லட்சுமி மிட்டல் (10.3 பில்லியன் டாலர்) ஆகியோர் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளனர்.

forbes Gautam Adani mukesh ambani
இதையும் படியுங்கள்
Subscribe