உலகளவில் அதிகம் மாசு அடைந்துள்ள நகரங்களின் பட்டியலை தனியார் தொண்டமைப்பு ஒன்று வெளியிட்டுள்ளது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/delhi_smog-std.jpg)
உலகம் முழுவதும் 3000 நகரங்களில் நடத்தப்பட்ட இந்த ஆய்வின் முடிவுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. ஆய்வுகளை மேற்கொள்ளப்பட்ட 3000 நகரங்களில் 64 சதவீத நகரங்களில் காற்று மாசு அபாயநிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அமைச்சு காரணமாக நுரையீரல் புற்று நோய், பக்கவாதம், மாரடைப்பு, சுவாசக்கோளாறுகள், ஆஸ்துமா உள்ளிட்ட நோய்கள் வருவதற்கான அபாயம் இருப்பதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த அமைப்பு வெளியிட்டுள்ள பட்டியலில் டாப் 10 இடங்களில் 7 இந்திய நகரங்கள் இருப்பது மிகவும் கவலையளிக்க கூடிய விஷயமாக பார்க்கப்படுகிறது.
உலக அளவில் இந்தியாவின் குர்கான் தான் முதலிடத்தில் உள்ளது. குர்கானை தவிர, காசியாபாத், பரிதாபாத், பிவாடி, நொய்டா, பாட்னா மற்றும் லக்னோ ஆகிய நகரங்களும் டாப் 10 ல் இடம் பிடித்துள்ளன. டாப் 10 ல் மீதமுள்ள 3 இடங்களில் சீனாவின் ஹோடான் நகரமும் பாகிஸ்தானில் உள்ள லாகூர் மற்றும் பைசலாபாத் நகரங்கள் உள்ளன.
கடந்த பல ஆண்டுகளாக முதலிடத்திலிருந்த சீனாவின் பெய்ஜிங் நகரம் முதல் 10 இடத்திற்குள் வரவில்லை. கடந்த சில ஆண்டுகளாக அங்கு நடைமுறையில் இருக்கும் மாசு கட்டுப்பாடு திட்டங்கள் காரணமாக அங்கு 40 சதவீத அளவு மாசு அளவு குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)