2019 ஆம் ஆண்டு விரைவில் முடிவடைய உள்ள நிலையில், இந்த ஆண்டில் இந்திய அளவில் அதிகம் குறிப்பிடப்பட்ட டாப் 10 அரசியல் தலைவர்களின் (ஆண், பெண்) பெயர்களை ட்விட்டர் இந்தியா வெளியிட்டுள்ளது.
ட்விட்டர் வெளியிட்ட இந்த பட்டியலில், கடந்த ஆண்டில் இந்தியாவில் அதிகமாக குறிப்பிடப்பட்ட அரசியல் தலைவர் என்ற பட்டியலில் ஆண்கள் பிரிவில் பிரதமர் மோடி முதலிடம் பிடித்துள்ளார். அதேபோல பெண் தலைவர்களை பொருத்தவரை ஸ்மிருந்தி இரானிக்கு முதலிடம் கிடைத்துள்ளது. பெண் தலைவர்களை பொருத்தவரை, பிரியங்கா காந்தி, சுஷ்மா ஸ்வராஜ், நிர்மலா சிதாராமன், மம்தா பனர்ஜி ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். ஆண் தலைவர்களின் பட்டியலில் பிரதமர் மோடிக்கு முதலிடமும் , காங்கிரஸின் ராகுல் காந்திக்கு இரண்டாம் இடமும் கிடைத்துள்ளது. இவர்களுக்கு அடுத்தடுத்த இடங்களில், அமித் ஷா, அர்விந்த் கேஜ்ரிவால், யோகி ஆதித்யநாத் ஆகியோர் இடம் பெற்றுள்ளன.