Advertisment

இந்தியாவிலேயே மிக மோசமான ரயில் நிலையம் உள்ள மாநிலம் தமிழகம்... வெளியான அதிர்ச்சி தகவல்!

இந்திய ரயில்வே அமைச்சகம் இந்தியாவில் உள்ள மிகவும் மோசமான 10 ரெயில்வே நிலையங்கள், சுத்தமான 10 ரெயில்வே நிலையங்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்தியளவில் உள்ள 700க்கும் மேற்பட்ட ரெயில் நிலையங்களில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

Advertisment

அதன்படி இந்தியாவின் மிகச்சிறந்த ரெயில்வே நிலையமாக ராஜஸ்தானில் உள்ள ஜெய்ப்பூர் ரெயில் நிலையமும், மிகவும் மோசமான ரெயில்வே நிலையமாக சென்னை பெருங்களத்தூர் ரெயில்வே நிலையமும் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவின் டாப் 10 சுத்தமான ரெயில்வே நிலையங்கள்:

1.ஜெய்ப்பூர்(ராஜஸ்தான்)

2.ஜோத்பூர்(ராஜஸ்தான்)

3.துர்காபூரா(ராஜஸ்தான்)

4.ஜம்மு தாவை

5.காந்திநகர் -ஜேபி(ராஜஸ்தான்)

6.சூரத்கார்(ராஜஸ்தான்)

7.விஜயவாடா

8.உதய்பூர் சிட்டி(ராஜஸ்தான்)

9.அஜ்மீர்(ராஜஸ்தான்)

10.ஹரித்வார்

இந்தியாவின் டாப் 10 மோசமான ரெயில்வே நிலையங்கள்:

1.பெருங்களத்தூர்(தமிழ்நாடு)

2.கிண்டி(தமிழ்நாடு)

3.டெல்லி சாதர் பஜார்

4.வேளச்சேரி(தமிழ்நாடு)

5.கூடுவாஞ்சேரி(தமிழ்நாடு)

6.சிங்கப்பெருமாள்(தமிழ்நாடு)

7.ஒட்டப்பாலம்(கேரளா)

8.பழவந்தாங்கல்(தமிழ்நாடு)

9.அரைரா கோர்ட்(பீஹார்)

10.குர்ஜா(உத்தர பிரதேசம்)

மிகவும் சுத்தமான ரெயில்வே நிலையங்களில் 6 இடங்களை ராஜஸ்தான் மாநிலம் பிடித்துள்ளது.அதே நேரம் மிகவும் மோசமான ரெயில்வே நிலையங்களில் 6 இடங்களை தமிழ்நாடு பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Train
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe