Skip to main content

திஷா ரவிக்கு ஜாமீன் வழங்க போலீஸார் எதிர்ப்பு! தீர்ப்பு ஒத்தி வைப்பு!

Published on 21/02/2021 | Edited on 21/02/2021
jk

 

வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடி வரும் விவசாயிகளை  ஆதரித்து,  ஸ்வீடனை சேர்ந்த பருவநிலை செயற்பாட்டாளர் கிரேட்டா தன்பர்க்,  டூல்கிட் லிங்க் ஒன்றை ட்விட்டரில் பகிர்ந்து கொண்டார். அந்த டூல்கிட்டை பெங்களூருவை சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் திஷா ரவி, மும்பையை சேர்ந்த நிகிகா ஜேக்கப், அவரது கூட்டாளி ஷாந்தனு ஆகியோர் உருவாக்கியதாக குற்றம்சாட்டியது  டெல்லி சைபர் கிரைம் போலீஸ்!

 

இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில்  திஷா ரவியை டெல்லி போலீஸார் கைது செய்து தங்கள் கஸ்டடியில்  எடுத்து விசாரித்தனர். கஸ்டடி முடிந்த  நிலையில், நீதிமன்றக் காவலில் இருக்கும் அவர்,  ஜாமீன் கோரி டெல்லி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.  இந்த மனு , கூடுதல் செசன்ஸ் நீதிபதி தர்மேந்திர ராணாவிடம்  விசாரணைக்கு வந்தது. அப்போது,  திஷா ரவிக்கு ஜாமீன் வழங்க கடும் எதிர்ப்புத் தெரிவித்த போலீஸ் தரப்பு  வழக்கறிஞர்,  "  காலிஸ்தான் ஆதரவாளர்களுடன் இணைந்து டூல் கிட்டை தயாரித்துள்ளார்  திஷாரவி. இந்தியாவின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்க நடக்கும் உலகளாவிய சதியிலும், விவசாயிகள் போராட்டத்தில் அமைதியற்ற சூழலை உருவாக்கவும் இவர்  முயன்றுள்ளார். இது உண்மையில் டூல் கிட் அல்ல ;  உலகளவில் இந்தியாவின் நற்பெயரைக் கெடுத்து, அமைதியற்ற சூழலை உருவாக்கும் முயற்சியாகும். அது மட்டுமல்லாமல் , தனது  வாட்ஸ் அப் உரையாடல்களையும் மற்ற ஆதாரங்களையும் அழித்து விட்டார்.  தவறு  செய்யவில்லை எனில்,  எதற்காக  வாட்ஸ் அப் தகவல்களை அழிக்க வேண்டும் ? " என கூறி எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். இதனையடுத்து தீர்ப்பை  ஒத்திவைத்துள்ளது நீதிமன்றம்.


 

சார்ந்த செய்திகள்