Advertisment

செல்ஃபோனில் கேம் விளையாடிய மாணவன் உயிரிழப்புக்கு காரணம் என்ன? - எஸ்.பி.ரங்கநாதன் பேட்டி   

Too much noise on the headphones ...- SP Ranganathan interview

புதுச்சேரி மாநிலம், வில்லியனூர் அருகே மணவெளி பகுதியைச் சேர்ந்த பச்சையப்பன் என்பவரின் 16 வயது மகன் தர்ஷன். இவர், செல்ஃபோனில் 'ஃபயர்வால்' எனும் ஆன்லைன் கேமை நீண்ட நேரம் விளையாடியுள்ளார். அப்போது, காதில் ஹெட்செட் அணிந்து அதிக சத்தத்துடன் கேம் விளையாடிக் கொண்டிருந்த தர்ஷன், திடீரென சுய நினைவை இழந்து மயங்கி விழுந்தார்.

Advertisment

இதைப் பார்த்த சிறுவனின் பெற்றோர் உடனடியாகச் சிறுவனை வீட்டிற்கு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாகக் கூறினர்.

Advertisment

இந்நிலையில் புதுச்சேரிஎஸ்.பி. ரங்கநாதன்செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “ஹெட்ஃபோனில் அதிக சத்தத்துடன்நீண்ட நேரம் செல்ஃபோனில் கேம்விளையாடியதால் மாணவர் உயிரிழந்துள்ளார். மாணவனின் மூளை நரம்புகள் பாதிக்கப்பட்டு, கோமாநிலைக்குச் சென்றதால், இந்த மரணம் நிகழ்ந்துள்ளது. அதேபோல்இறந்த மாணவர்நீண்ட நேரம் ஆன்லைன் வகுப்பிலும் பங்கேற்றதால் இதுகுறித்து மாணவர்களுக்கு ஆசிரியர்கள் விழிப்புணர்வு தர வேண்டும்.” என்றார்.

police Mobile Puducherry
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe