Published on 10/10/2018 | Edited on 10/10/2018

வங்கக்கடலில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு நிலை, மண்டலமாக மாறி, இறுதியில் புயலாக மாறியுள்ளது. இந்திய வானிலை மையம் இந்த புயலுகு ’டிட்லி’ என்று பெயரிட்டுள்ளனர். இந்த புயல் அடுத்த 24 மணிநேரத்தில் தீவிரமாக மாற வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. ஒடிசா மற்றும் தெலுங்கானா மாநிலங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ஒடிசாவில் உள்ள கஜபதி, கன்ஜம், புரி, ஜகத்சிங்பூர் ஆகிய 4 மாவட்டங்களிலுள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளை இன்றும், நாளையும் மூட அரசு உத்தரவிட்டுள்ளது. மாநிலம் முழுவதும் மீட்புக்குழுவினர் தயார் நிலையில் உள்ளனர்.