
இளம்பெண் ஒருவர் நூடுல்ஸ் சமைக்க தக்காளியைப் பயன்படுத்திய நிலையில் நஞ்சு கலந்த தக்காளி அப்பெண்ணின் உயிரைப் பறித்த சம்பவம் மும்பையில் நிகழ்ந்துள்ளது.
மும்பையைச் சேர்ந்த நேகா நிஷாத் என்ற பெண் வீட்டில் மேகி நூடுல்ஸ் செய்து சாப்பிட்ட சில மணி நேரத்திலேயே வயிற்று வலியால் துடித்துள்ளார். உடனடியாக அப்பெண்ணின் கணவர் அவரை அழைத்துகொண்டு மருத்துவமனைக்குச் சென்ற நிலையில், கடந்த ஐந்து நாட்களாக சிகிச்சை பெற்றுவந்த நேகா நிஷாத் கடந்த புதன்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் சம்பவத்தன்று வீட்டில் எலி தொல்லையை சமாளிக்க தக்காளியில் நஞ்சு தடவி வைத்துள்ளார் நேகா நிஷாத். சிலமணி நேரத்தில் நூடுல்ஸ் சமைக்க திட்டமிட்ட நேகா நிஷாத், டிவி பார்த்துக்கொண்டே ஞாபக மறதியில் எலிக்காக வைக்கப்பட்ட நஞ்சு தடவிய தக்காளியை வைத்து நூடுல்ஸ் சமைத்துள்ளார். பின்னர் அதனை சாப்பிட்டதால் அவர் உயிரிழந்தது தெரியவந்துள்ளது.
Follow Us