வி.கே.பாண்டியன் மீது தாக்குதல்; ஒடிசாவில் பரபரப்பு

Tomato thrown at VK Pandian in Odisha

கடந்த 2000 ஆம் ஆண்டு ஒடிசா கேடரில் ஐ.ஏ.எஸ் அதிகாரியாக தேர்ச்சி பெற்ற தமிழகத்தை சேர்ந்த வி.கே.பாண்டியன் அம்மாநிலத்தின் கலஹண்டி மாவட்டத்தின் துணை ஆட்சியராக நியமிக்கப்பட்டார். பின்பு ஒடிசாவில் பல்வேறு மாவட்டங்களில் ஆட்சியராக பணியாற்றிய வி.கே.பாண்டியன் கடந்த 2011ஆம் ஆண்டு முதல் முதல்வர் நவீன் பட்நாயக்கின் தனிச் செயலாளராக இருந்து வந்தார். சொல்லப்போனால் ஒடிசா அரசாங்கத்திலும், ஆளும் கட்சியான பிஜு ஜனதா தள நிர்வாகிகள் மத்தியிலும் நவீன் பட்நாயக்கிற்கு அடுத்த இடத்தில் வி.கே பாண்டியன் மிகுந்த செல்வாக்கு உள்ள நபராக பார்க்கப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு வி.கே.பாண்டியன் விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பித்திருந்த நிலையில் மத்திய அரசு அதற்கு ஒப்புதல் அளித்தது. அதற்கு அடுத்தநாள் ஒடிசா மாநிலத்தின் கேபினெட் அமைச்சர் பதவிக்கு இணையான பதவியில் வி.கே.பாண்டியன் நியமிக்கப்பட்டார். . ஒடிசா முதல்வருக்கு கீழ் நேரடியாக பணியாற்றும் வகையில் மாற்றத்திற்கான முயற்சிகளை மேற்கொள்ளும் 5டி திட்டம் மற்றும் நபின் ஒடிசாவின் தலைவராக நியமிக்கப்பட்டு பணியாற்றி வருகிறார்.

Tomato thrown at VK Pandian in Odisha

இந்த நிலையில் ஒடிசாவின் கஞ்சம் மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வி.கே பாண்டியன் பங்கேற்றிருந்தார். அப்போது மர்ம நபர் ஒருவர் தக்காளியை வீசினார். பின்னர் தக்காளி வீசிய அந்த இளைஞரை பிஜீ ஜனதள தொண்டர்கள் கடுமையாக தாக்கி இழுத்துச் சென்றனர். காவல்துறை மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் இந்த தாக்குதல் நடைபெற்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படியுங்கள்
Subscribe