Advertisment

ஃபேன்சி நம்பருக்காக 17 லட்சம் செலவு செய்த பிரபல நடிகர்!!

பரக

Advertisment

தெலுங்கு நடிகர் தான் வாங்கிய காருக்கு விருப்பமான வாகன பதிவு எண் வேண்டும் என்ற காரணத்திற்காக 17 லட்சம் செலவு செய்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பாலிவுட், கோலிவுட் சினிமாவுக்கு இந்தியா முழுவதும் ரசிகர்கள் இருந்தாலும், தெலுங்கு படங்களுக்கு மட்டும் அவற்றையெல்லாம் தாண்டிய ஒரு 'ரீச்' எப்போதும் இருக்கும். அதிரடி சண்டைக் காட்சிகள், கண்ணீர் வர வைக்கும் சோக காட்சிகள் என மற்ற மாநில படங்களைவிட தெலுங்கு படங்கள் எப்போதும் தனித்துத் தெரியும். குறிப்பாக, சண்டைக் காட்சிகள் எல்லாம் ஹாலிவுட் படங்களே தோற்றுவிடும் அளவுக்கு அனல் பறக்கும்.

குறிப்பாக, ரயில் அடியில் புகுந்து போவது, இதயத்தை தூக்கி எறிந்தவுடன் மருத்துவமனையில் இருக்கும் நபருக்கு நேரடியாக போய் பொருந்திவிடுவது என படம் பார்க்கும் நபர்களுக்குத் தலை சுற்றிவிடும். இந்தக் காட்சிகளை இன்றளவும் சில தெலுங்கு பட இயக்குநர்கள் தொடர்ந்து தங்களுடைய படங்களில் வைத்து வருகிறார்கள். அந்த வகையில் திரையில் பேசுவதிலும், சண்டையிடுவதிலும் வல்லவரான ஜூனியர் என்டிஆர், தற்போது தனக்கு மிகவும் படித்த லம்போர்கினி காரை 3 கோடிக்கு வாங்கியுள்ளார். அந்த வண்டிக்குத் தனக்குப் பிடித்த ஃபேன்சி நம்பரான 9999 வேண்டும் என்ற காரணத்திற்காக போக்குவரத்து அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். போட்டி அதிகமாக இருந்ததால் 17 லட்சம் கொடுத்து அந்த எண்ணை இவர் பெற்றுள்ளார். இந்த சம்பவம் தெலுங்கு சினிமாவில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கு சினிமாவே ஆச்சரியம்தான்!

junior ntr
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe