Skip to main content

டோல்கேட்டில் நாளை முதல் ஃபாஸ்டேக் கட்டாயம்! 

Published on 31/12/2020 | Edited on 31/12/2020

 

toll plazas fastag mandatory peoples nhai announced

 

தமிழகம் உட்பட நாடு முழுவதும் சுங்கச்சாவடிகளைக் கடக்க நாளை முதல் வாகனங்களுக்கு ஃபாஸ்டேக் (FASTag) கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

தமிழகத்தில் உள்ள 48 சுங்கச்சாவடிகளிலும் கார், லாரி, பஸ், வேன் உள்ளிட்ட வாகனங்களுக்கு ஃபாஸ்டேக் கட்டாயமாகிறது. ஃபாஸ்டேக் (FASTag) இல்லாமல் சுங்கச்சாவடிக்கு வரும் வாகனங்கள் இரண்டு மடங்கு கட்டணத்தை அபராதமாகச் செலுத்த நேரிடும் என்று தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் (National Highways Authority Of India) தெரிவித்துள்ளது.

 

மேலும் ஃபாஸ்டேக் பெறுவதற்காக சுங்கச்சாவடிகளுக்கு அருகே முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதேபோல் ஃபாஸ்டேக் இணையதளம் மூலமும் விண்ணப்பித்து ஃபாஸ்டேக் பெற்றுக்கொள்ளலாம். தற்போது 75%- க்கும் மேற்பட்டோர் ஃபாஸ்டேக் முறையில் சுங்கக் கட்டணம் செலுத்தி வருகின்றனர் என்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது. 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு ரத்து!

Published on 01/04/2024 | Edited on 01/04/2024
Cancellation of fee increase at toll booths

தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கட்டுப்பாட்டின் கீழ் மொத்தம் உள்ள 62 சுங்கச்சாவடிகளில் 7 சுங்கச்சாவடிகளில் நள்ளிரவு (01.04.2024) முதல் கட்டண உயர்வு அமலுக்கு வருவதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதாவது அரியலூர் மாவட்டத்தில் மணகெதி, திருச்சி மாவட்டம் கல்லக்குடி, வேலூர் மாவட்டம் வல்லம், திருவண்ணாமலை மாவட்டம் இனம்கரியாந்தால், விழுப்புரம் மாவட்டம் தென்னமாதேவி ஆகிய 7 சுங்கச் சாவடிகளில் இந்த கட்டண உயர்வு அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதன் மூலம் இந்த 7 சுங்கச் சாவடிகளில் குறைந்தபட்சம் 5 ரூபாயிலிருந்து 20 ரூபாய் வரை கட்டண உயர்வு ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் ஒரு வழிப் பயணம் மற்றும் அதே நாளில் திரும்பும் பயணம் ஆகியவற்றுக்கான கட்டணம் ஐந்து ரூபாய் முதல் முப்பது ரூபாய் வரையிலும், மாதாந்திர கட்டணம் 100 ரூபாயிலிருந்து 400 ரூபாய் வரை உயரும் எனவும் கூறப்பட்டது. சுங்கச் சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படுவது குறித்து வாகன உரிமையாளர்கள் கவலை தெரிவித்துள்ளதோடு, காய்கறிகள், பழங்கள், பால் மற்றும் மளிகைப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயரும் அபாயம் உள்ளதாகவும் கருத்து தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளின் கட்டண உயர்வு முடிவைத் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் திரும்பப் பெற்றுள்ளது. இது தொடர்பான உத்தரவு அனைத்து திட்ட இயக்குநர்களுக்கும் கடிதம் மூலம் அனுப்பப்பட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை ஏற்கனவே உள்ள கட்டணமே வசூலிக்கப்படும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் முடிந்த பிறகு ஜூன் மாதத்தில் இந்த கட்டண உயர்வு அமலுக்கு வரலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக இந்த கட்டண உயர்வு குறித்த அறிவிப்புக்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் லாரி உரிமையாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

Next Story

லாரியும் காரும் நேருக்கு நேர் மோதி விபத்து; கல்லூரி மாணவர் பலி

Published on 23/03/2023 | Edited on 23/03/2023

 

perambalur nearest car and lorry incident

 

பெரம்பலூர் அருகே 22.03.2023 அன்று மாலை சுமார் 3.15 மணி அளவில் லாரியும் காரும் மோதிக் கொண்ட விபத்தில் கல்லூரி மாணவர் பலியானார். விபத்தில் சிக்கிய 3 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பெரம்பலூர் தம்பை அருகே ஜல்லி ஏற்றிக் கொண்டு சென்ற டிப்பர் லாரி மீது மதுரையில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற கார் மோதிய விபத்தில் மதுரை காந்தி நகரை சேர்ந்த மணிகண்டன் மகன் ஷ்யாம் கண்ணன் (வயது 22) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவர் சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் பேஷன் டெக்னாலஜி படித்து வந்தார். காரில் உடன் பயணித்த மதுரை கே.கே. நகரை சேர்ந்த வாசு மகன் சஷ்வத் (வயது 24), மதுரை மூலக்கரையை சேர்ந்த ஆகாஷ் (வயது 23) மற்றும் அஜய் (வயது 22) ஆகிய மூவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

இதுகுறித்து மங்களமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சாலை விபத்தில் கல்லூரி மாணவர் ஒருவர் பலியான சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.