Advertisment

"அதிக சகிப்புத்தன்மை வேண்டும்" - மீண்டும் சர்ச்சையை கிளப்பிய ஸொமேட்டோ நிறுவனர்!

ZOMOTO

ஸொமேட்டோ செயலியில் விகாஷ் என்ற நபர் உணவு ஆர்டர் செய்துள்ளார். ஆனால் அவர் ஆர்டர் செய்த உணவு அவருக்கு வழங்கப்படவில்லை. இதனால் ஸொமேட்டோவின் வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்புகொண்ட அவர், இதுதொடர்பாக புகாரளித்ததுடன் பணத்தைத் திரும்ப அளிக்குமாறு கேட்டுள்ளார்.

Advertisment

இதுதொடர்பான உரையாடலின்போது, வாடிக்கையாளர் சேவை மைய ஊழியர், இந்தி நமது நாட்டின் தேசிய மொழி என்றும், எனவே அனைவரும் அதை தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும் என தெரிவித்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. சமூகவலைதளங்களில் ஸொமேட்டோ நிறுவனம் கடுமையாக விமர்சிக்கப்பட்டதுடன், #RejectZomato என்ற ஹாஷ்டேக்கும், #HindiIsNotNationalLanguage என்ற ஹாஷ்டேக்கும் ட்ரெண்டாக தொடங்கியது. அதேபோல்#Hindi_Theriyathu_Poda என்ற ஹாஷ்டேக்கும் ட்ரெண்ட் ஆனது.

Advertisment

இதனையடுத்துஸொமேட்டோ நிறுவனம் மன்னிப்பு கோரியது. இந்தநிலையில், தற்போது இந்த சம்பவம் தொடர்பாக ஸொமேட்டோவின் நிறுவனர்தீபிந்தர் கோயல்வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவு மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவர் தனது ட்விட்டர் பதிவில், நாட்டில் இப்போது இருப்பதைவிட அதிக சகிப்புத்தன்மை வேண்டுமென தெரிவித்துள்ளார்.

தீபிந்தர் கோயல் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது,“ஒரு உணவு விநியோக நிறுவனத்தின் ஆதரவு மையத்தில் யாரோ ஒருவரின் அறியாபிழை தேசிய பிரச்சினையாக மாறிவிட்டது. நம் நாட்டில் சகிப்புத்தன்மை இப்போது இருப்பதைவிட அதிகமாக இருக்க வேண்டும். இங்கு யாரைக் குறை கூறுவது?

நாங்கள்அந்த முகவரை மீண்டும் பணி அமர்த்துகிறோம். அவர் பணி நீக்கம் செய்யப்படுவதற்கு இது மட்டுமேகாரணமாக இருக்கக் கூடாது. இதிலிருந்து அவர் எளிதாக கற்றுக்கொண்டு, முன்னோக்கிச் செல்லும்போதுசிறப்பாக செயல்படலாம்.

நினைவில் கொள்ளுங்கள், எங்களதுகால் சென்டர் முகவர்கள் இளைஞர்கள். அவர்கள் கற்றலிலும், தொழில் வாழ்க்கையிலும் தொடக்கத்தில் உள்ளனர். அவர்கள் மொழிகள் மற்றும் பிராந்திய உணர்வுகளில் நிபுணர்கள் அல்ல. நானும் கூட அதில் நிபுணர் இல்லை.நாம் அனைவரும் மற்றவரின் குறைபாடுகளைப் பொறுத்துக்கொள்ள வேண்டும். மேலும், மற்றவரின் மொழி மற்றும் பிராந்திய உணர்வுகளைப் பாராட்ட வேண்டும்.

தமிழ்நாடு - நாங்கள் உன்னை நேசிக்கிறோம். நாட்டின் மற்ற பகுதிகளை நாங்கள் எவ்வளவு நேசிக்கிறோமோ அந்தளவிற்கு நேசிக்கிறோம். அதிகமாகவோ அல்லது குறைவாகவோ நேசிக்கவில்லை. நாம் எவ்வளவு வித்தியாசமாக இருக்கிறோமோ, அதே அளவு ஒற்றுமையாக இருக்கிறோம்.” இவ்வாறுதீபிந்தர் கோயல் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், சகிப்புத்தன்மை அதிகம் வேண்டும் எனதீபிந்தர் கோயல் கூறியதற்காக மீண்டும் சமூகவலைதளங்களில்கண்டனம் எழுந்துள்ளது. மேலும், இந்த ட்விட்டர் பதிவு செய்த தவறை நியாயப்படுத்துவது போல் இருப்பதாகவும் இணையவாசிகள் கண்டம் தெரிவித்துவருகின்றனர்.

Tamilnadu anti hindi agitation zomato
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe