Skip to main content

"அதிக சகிப்புத்தன்மை வேண்டும்" - மீண்டும் சர்ச்சையை கிளப்பிய ஸொமேட்டோ நிறுவனர்!

Published on 19/10/2021 | Edited on 19/10/2021

 

ZOMOTO

 

ஸொமேட்டோ செயலியில் விகாஷ் என்ற நபர் உணவு ஆர்டர் செய்துள்ளார். ஆனால் அவர் ஆர்டர் செய்த உணவு அவருக்கு வழங்கப்படவில்லை. இதனால் ஸொமேட்டோவின் வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்புகொண்ட அவர், இதுதொடர்பாக புகாரளித்ததுடன் பணத்தைத் திரும்ப அளிக்குமாறு கேட்டுள்ளார்.

 

இதுதொடர்பான உரையாடலின்போது, வாடிக்கையாளர் சேவை மைய ஊழியர், இந்தி நமது நாட்டின் தேசிய மொழி என்றும், எனவே அனைவரும் அதை தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும் என தெரிவித்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. சமூகவலைதளங்களில் ஸொமேட்டோ நிறுவனம் கடுமையாக விமர்சிக்கப்பட்டதுடன், #RejectZomato என்ற ஹாஷ்டேக்கும், #HindiIsNotNationalLanguage என்ற ஹாஷ்டேக்கும் ட்ரெண்டாக தொடங்கியது. அதேபோல் #Hindi_Theriyathu_Poda என்ற ஹாஷ்டேக்கும் ட்ரெண்ட் ஆனது.

 

இதனையடுத்து ஸொமேட்டோ நிறுவனம் மன்னிப்பு கோரியது. இந்தநிலையில், தற்போது இந்த சம்பவம் தொடர்பாக ஸொமேட்டோவின் நிறுவனர் தீபிந்தர் கோயல் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவு மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவர் தனது ட்விட்டர் பதிவில், நாட்டில் இப்போது இருப்பதைவிட அதிக சகிப்புத்தன்மை வேண்டுமென தெரிவித்துள்ளார்.

 

தீபிந்தர் கோயல் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது, “ஒரு உணவு விநியோக நிறுவனத்தின் ஆதரவு மையத்தில் யாரோ ஒருவரின் அறியாபிழை தேசிய பிரச்சினையாக மாறிவிட்டது. நம் நாட்டில் சகிப்புத்தன்மை இப்போது இருப்பதைவிட அதிகமாக இருக்க வேண்டும். இங்கு யாரைக் குறை கூறுவது?

 

நாங்கள் அந்த முகவரை மீண்டும் பணி அமர்த்துகிறோம். அவர் பணி நீக்கம் செய்யப்படுவதற்கு இது மட்டுமே காரணமாக இருக்கக் கூடாது. இதிலிருந்து அவர் எளிதாக கற்றுக்கொண்டு, முன்னோக்கிச் செல்லும்போது சிறப்பாக செயல்படலாம்.

 

நினைவில் கொள்ளுங்கள், எங்களது கால் சென்டர் முகவர்கள் இளைஞர்கள். அவர்கள் கற்றலிலும், தொழில் வாழ்க்கையிலும் தொடக்கத்தில் உள்ளனர். அவர்கள் மொழிகள் மற்றும் பிராந்திய உணர்வுகளில் நிபுணர்கள் அல்ல. நானும் கூட அதில் நிபுணர் இல்லை. நாம் அனைவரும் மற்றவரின் குறைபாடுகளைப் பொறுத்துக்கொள்ள வேண்டும். மேலும், மற்றவரின் மொழி மற்றும் பிராந்திய உணர்வுகளைப் பாராட்ட வேண்டும்.

 

தமிழ்நாடு - நாங்கள் உன்னை நேசிக்கிறோம். நாட்டின் மற்ற பகுதிகளை நாங்கள் எவ்வளவு நேசிக்கிறோமோ அந்தளவிற்கு நேசிக்கிறோம். அதிகமாகவோ அல்லது குறைவாகவோ நேசிக்கவில்லை. நாம் எவ்வளவு வித்தியாசமாக இருக்கிறோமோ, அதே அளவு ஒற்றுமையாக இருக்கிறோம்.” இவ்வாறு தீபிந்தர் கோயல் தெரிவித்துள்ளார்.

 

இந்தநிலையில், சகிப்புத்தன்மை அதிகம் வேண்டும் என தீபிந்தர் கோயல் கூறியதற்காக மீண்டும் சமூகவலைதளங்களில் கண்டனம் எழுந்துள்ளது. மேலும், இந்த ட்விட்டர் பதிவு செய்த தவறை நியாயப்படுத்துவது போல் இருப்பதாகவும் இணையவாசிகள் கண்டம் தெரிவித்துவருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

செஞ்சுரிக்கு மத்தியில் சிலிர்க்க வைத்த மழை

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
summer rain in madurai

பல இடங்களில் வெயில் செஞ்சுரி அடித்து வரும் நிலையில் ஒரு சில இடங்களில் பெய்த மழை மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக மதுரையின் நகரப் பகுதிகளில் பரவலாக மழை பொழிந்து வருகிறது.

மதுரையில் காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் மதுரையின் நகரப் பகுதி மற்றும் கோரிப்பாளையம், தல்லாகுளம் உள்ளிட்ட பகுதிகளில் சாரல் மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் ஏற்பட்டதால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். ஒரு சில இடங்களில் நீர் தேங்கியதால் இருசக்கர வாகனங்களில் செல்வோர் சிறிது சிரமத்திற்கு உள்ளாகினர்.

மதுரையின் பழங்காநத்தம், பெரியார் பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் காலை முதல் மழை பெய்த நிலையில் பிற்பகலுக்கு மேல் தற்பொழுது கோரிப்பாளையம் தல்லாகுளம் பகுதிகளில் மழை பொழிந்து வருகிறது. அதேபோல் சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் தமிழ்நாட்டில் அடுத்த மூன்று மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிவிப்பின்படி நீலகிரி, ராமநாதபுரம், திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர், சேலம், நாமக்கல், கரூர், தேனி, மதுரை, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, சிவகங்கை ஆகிய 15 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மக்களவை தேர்தல்;தமிழகத்தில் பொது விடுமுறை அறிவிப்பு 

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
 Lok Sabha election; public holiday announced in Tamil Nadu

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அரசியல் கட்சிகள் தேர்தல் பரப்புரைகளை தீவிரப்படுத்தி வரும் நிலையில்,தமிழகத்தில் 8 ஆயிரத்து 50 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்றும் 181 வாக்குச்சாவடிகள் மிகவும் பதற்றமானவை எனவும் கண்டறியப்பட்டுள்ளன. தமிழ்நாட்டிலேயே மதுரை மாவட்டத்தில் அதிகபட்சமாக 511 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளன எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் மக்களவை தேர்தல் நடைபெறும் நாளான ஏப்ரல் 19ஆம் தேதி வெள்ளிக்கிழமை தமிழகத்தில் பொதுவிடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.