விளாடிமிர் புதின் இன்று இரண்டு நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வருகிறார். இந்தியா வரும் புதின் பிரதமர் மோடி மற்றும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து பேச இருக்கிறார். இந்த சுற்றுப்பயணத்தில் இரு நாட்டுக்கும் இடையேயான நட்புறவை வலுப்படுத்த பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.