style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="5420060568" data-ad-format="link">
ஜனநாயகத்தில் இன்றைய நாள் மிக முக்கியமானநாள் என பிதர்மர் மோடி தெரிவித்துள்ளார்.
கடந்த 18-ஆம் தேதிநடந்த மழைக்கால கூட்டத்தொடரின்முதல் நாளே தெலுங்கு தேசம் கட்சி உறுப்பினர்கேசினேனி சீனிவாஸ் கொண்டுவந்துள்ளநம்பிக்கையில்லா தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்படுவதாகசபாநாயகர்மகாஜன் அறிவித்தார்.
காங்கிரஸ் தலைவர்மல்லிகார்ஜூன கார்கே நாங்கள்தான் பெரிய கட்சி எனவே நாங்கள் கொண்டுவரும் நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஏற்க வேண்டும் என முறையிட்டார். பெரிய கட்சியோ சிறிய கட்சியோ கொடுக்கப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. 20-ஆம் தேதி முழுவதும் நம்பிக்கையில்லா தீர்மானம் பற்றியவிவாதம்மற்றும் வாக்கெடுப்பு நடைபெறும் எனவே நாளை மற்ற அலுவல் பணிகள் நடைபெறாது என சபாநாயகர் தெரிவித்தார்.
அதெபோல் நாடாளுமன்றவிவகாரங்கள் துறை மந்திரி அனந்தகுமார் மற்ற கட்சிகளால் கொண்டுவரப்பட்டிருக்கும் நம்பிகையில்லா தீர்மானத்தை சந்திக்க அரசு தயார் என தெரிவித்தார்.மொத்தம் 535 உறுப்பினர்களை கொண்ட மக்களவையில் பாஜவின் சொந்த எம்பிக்கள் எண்ணிக்கைசபாநாயகர் உட்பட 274. கூட்டணி கட்சிகளின் ஆதரவு என மொத்தம் 313 உறுப்பினர்களின் ஆதரவு பாஜகவிற்குஉள்ள நிலையில்பாஜக சந்திக்கும் முதல் நம்பிக்கையில்லா தீர்மானம் இதுஎன்பதுகுறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பிரதமர் இன்று வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ஜனநாயகத்தில் இன்றைய நாள்முக்கியமான நாள். இன்று நாடே நம்மை உற்றுநோக்கி கொண்டிருக்கும். இன்றைய நாளில் நடைபெறும் விவாதம் ஆக்கப்பூர்வமானதாக இருக்கும் என நம்புகிறேன். மக்களுக்கும், அரசியலைமைப்பை உருவாக்கியவர்களுக்கும் நன்றி என கூறியுள்ளார்.