ADVERTISEMENT

இதுவரை 2.99 கோடி பேர் குணம்... இந்திய கரோனா நிலவரம்!

10:06 AM Jul 11, 2021 | kalaimohan

ADVERTISEMENT

இந்தியாவில் இதுவரை 3.08 கோடி பேருக்கு மேல் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று (11.07.2021) வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, இந்தியாவில் கரோனா தொற்று பாதிப்பு 3,08,37,222 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரேநாளில் 41,506 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நேற்று ஒரேநாளில் 41,526 பேர் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்தனர். இதனால் ஒட்டுமொத்தமாக இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 2,99,75,064 ஆக உயர்ந்துள்ளது. இதனால் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் விகிதம் 97.20 சதவீதமாக இருக்கிறது. அதேபோல் உயிரிழப்பு விகிதம் 1.32 சதவீதமாக உள்ளது. இந்தியாவில் நேற்று ஒரேநாளில் 895 பேர் கரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதனால், இதுவரை கரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,08,040 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் கரோனாவிற்கு 4,54,118 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT