“இன்று முதல் 18 - 45  வயதுக்குட்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்படும்” - இணையதள பதிவை துணைநிலை ஆளுநர் துவக்கிவைப்பு! 

From today, 18-45 year olds will be vaccinated - Deputy Governor launches online registration!

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விழாவில், சுகாதாரத்துறை அதிகாரிகள் முன்னிலையில், துணைநிலை ஆளுநர் தமிழிசை கலந்துகொண்டு, 18 வயது முதல் 45 வயதுக்குட்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான இணையதள முன்பதிவை துவக்கிவைத்தார்.

அப்போது அவர், “இன்றுமுதல் (20.05.2021) 18 வயது முதல் 45 வயதுக்குட்பட்டவர்களுக்குத்தடுப்பூசி செலுத்தப்படும்.இதற்காக இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, இ.எஸ்.ஐ மருத்துவமனை, பல் மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட 6 இடங்களில் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. இதனை 18 வயதுக்கு மேற்பட்டோர் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்” எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

coronavirus vaccine Pondicherry Tamilisai Soundararajan
இதையும் படியுங்கள்
Subscribe