Advertisment

"தமிழர்களின் நீண்டகால வாதங்களை நீங்கள் ஒலித்திருக்கிறீர்கள்" - ராகுல் காந்திக்கு நன்றி தெரிவித்த தமிழக முதல்வர்!

mk stalin - rahul gandhi

இந்திய நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர், கடந்த 31 ஆம் தேதி குடியரசு தலைவர் உரையுடன் தொடங்கியது. இதனைத்தொடர்ந்து கடந்த 1 ஆம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்தநிலையில்குடியரசு தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நேற்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உரையாற்றினார்.

Advertisment

அப்போது ராகுல் காந்தி, இந்தியாவை மாநிலங்களின் ஒன்றியம் என குறிப்பிட்டதுடன், தமிழ்நாட்டை உங்களின்வாழ்நாளில் ஆளமுடியாது என பாஜகவை சாடினார். மேலும் தனது உரையின்போது நீட் விவகாரத்தைஎழுப்பிய ராகுல் காந்தி, மாநிலங்களின் உரிமை பற்றியும் பேசினார். ராகுல் காந்தியின் இந்த உரை, இந்திய அரசியலில் அதிர்வை ஏற்படுத்தியுள்ள நிலையில், பாஜக தலைவர்கள் ராகுல் காந்தியின் பேச்சை விமர்சித்துஎதிர்வினையாற்றி வருகின்றனர்.

Advertisment

இந்தநிலையில்தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின், தமிழகத்தின் வாதங்களை நாடாளுமன்றத்தில் ஒலித்ததற்காக ராகுல் காந்திக்கு நன்றி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக முதல்வர் மு.க ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், "இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் கருத்தை அழுத்தமாக வெளிப்படுத்தி, நாடாளுமன்றத்தில் நீங்கள் ஆற்றிய எழுச்சியூட்டும் உரைக்காக அனைத்து தமிழர்களின் சார்பாகவும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சுயமரியாதையை மதிக்கும், தனித்துவமான கலாச்சார, அரசியல் வேர்களில் தங்கியிருக்கும் தமிழர்களின் நீண்டகால வாதங்களை நீங்கள் நாடாளுமன்றத்தில் ஒலித்திருக்கிறீர்கள்" என பதிவிட்டுள்ளார்.

இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe