Advertisment

பாஜக அலுவலகம் முன்பு குவிந்த திரிணாமூல் தொண்டர்கள் !

TMC WORKERS

தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்கம் ஆகிய ஐந்து மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல், மார்ச் 27ஆம் தேதி தொடங்கி பல்வேறு கட்டங்களாக நடந்து முடிந்தது. இதற்கான வாக்கு எண்ணிக்கை தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. தற்போது ஒவ்வொரு தொகுதியிலும் முன்னிலை நிலவரங்கள் வெளியாகி வருகின்றன.

Advertisment

மேற்குவங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி 213 இடங்களில் முன்னணி வகிக்கிறது. பாஜக கூட்டணி 77 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இதனையடுத்துமேற்குவங்கத்தில் திரிணாமூல் காங்கிரஸின் வெற்றி கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டநிலையில், அக்கட்சியின் தொண்டர்கள் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.

Advertisment

மேலும் திரிணாமூல்கட்சி தொண்டர்கள், பாஜக அலுவலகம் முன்பு திரண்டும்கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்துஅப்பகுதிகளில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

election results tmc west bengal
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe