Advertisment

"யாருக்கு வாக்களித்தாலும் தாமரைக்குப் பதிவாகும் வாக்கு" - திரிணாமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டு...

tmc claims votes are added to bjp

மேற்குவங்க சட்டசபைத் தேர்தலில் யாருக்கு வாக்களித்தாலும், தாமரை சின்னத்திலேயே வாக்குப் பதிவாகிறது எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Advertisment

மேற்கு வங்க மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று (27.03.2021) காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. அம்மாநிலத்தில் 294 தொகுதிகளுக்கு 8 கட்டமாகத் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் முதற்கட்டமாக 30 தொகுதிகளுக்கு மட்டும் இன்று வாக்குப்பதிவு நடக்கிறது. இந்நிலையில், மேற்கு வங்கத்தில் யாருக்கு வாக்களித்தாலும், தாமரை சின்னத்திலேயே வாக்குப் பதிவாகிறது என திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

Advertisment

எந்தக் கட்சிக்கு வாக்களித்தாலும் அது பாஜகவின் தாமரைச் சின்னத்தில் பதிவாகும் வகையில் முறைகேடு செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. மேலும், திரிணாமூல் காங்கிரஸுக்கு வாக்களித்தால் தாமரைச் சின்னத்தில் வாக்களித்ததாக ஒப்புகைச் சீட்டில் பதிவாகியுள்ளதாகவும்,வாக்குப்பதிவு தொடங்கியதும் முதற்கட்டமாகத் தேர்தல் ஆணையம் அறிவித்த வாக்குப்பதிவு விவரங்களை திடீரென மாற்றி அறிவித்துவிட்டதாகவும் திரிணாமூல் காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.

Mamata Banerjee west bengal
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe