திருப்பதி லட்டு விவகாரம்; ஜெகன்மோகன் ரெட்டி வீட்டின் மீது பாஜகவினர் தாக்குதல்

Tirupati Lattu Affair; BJP attacked Jagan Mohan Reddy's house

திருப்பதி லட்டில் மாடு மற்றும் பன்றி இறைச்சி கொழுப்பு கலப்படம் செய்யப்பட்டதாக ஆந்திர அரசு முன்னாள் ஆளுங்கட்சி மீது வைத்திருக்கும் குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் கடந்த ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தலைமையிலான ஜெகன்மோகன் ரெட்டியின் ஆட்சியின் போது, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்படும் லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டதாக தற்போதைய முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டு வைத்திருந்தார். இந்த குற்றச்சாட்டு நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், அதிர்வலையையும் ஏற்படுத்தியுள்ளது.

இதனைத் தொடர்ந்து, அரசால் நவீன தரத்தில் மேம்படுத்தப்பட்ட இரண்டு வெவ்வேறு ஆய்வகங்களில் ஜூலை 6 மற்றும் 12ம் தேதிகளில் தயாரித்த நான்கு லட்டு நெய் மாதிரிகளை பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதன் அடிப்படையில், லட்டுக்களை தயாரிக்க பயன்படுத்தும் நெய்யில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டது உண்மைதான் என திருப்பதி தேவஸ்தான செயல் அலுவலர் சியாமளா ராவ் தெரிவித்திருந்தார்.

Tirupati Lattu Affair; BJP attacked Jagan Mohan Reddy's house

குறிப்பாக பாஜகவினர் இதற்குப் பல எதிர்வினைகளை ஆற்றி வருகின்றனர். இந்நிலையில் ஆந்திர முன்னாள் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியின் வீடு மீது கற்களை வீசி பாஜகவினர் தாக்குதல் நடத்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. குண்டூரில் உள்ள ஜெகன்மோகன் ரெட்டியின் வீட்டின் மீது பாஜகவின் மாணவர் அணியினர் கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் வீட்டின் பாதுகாவலர் அறையின் கண்ணாடிகள் உடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

jaganmohanreddy
இதையும் படியுங்கள்
Subscribe