Advertisment

திருப்பதி ஏழுமலையான் கோயில் மாடத்தில் விரிசல்..?

திருப்பதி ஏழுமலையான் கோவிவில் ஐம்பொன்னால் செய்யப்பட்ட உற்சவர் சாமி சிலையில் விரிசல் மற்றும் சுருக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. திருப்பதி தேவஸ்தனத்தில் 600 ஆண்டுகளுக்கு முன்பு ஐம்பொன்னால் செய்யப்பட்ட உற்சவர் மலையப்ப சாமி சிலை பிரம்மோற்சவ மற்றும் விழா காலங்களில் மாடவீதிகளில் பக்கதர்களுக்கு எழுந்தருளுகிறார். இந்த சிலையில் அடிப்பகுதியிலும் உச்சியிலும் விரிசல் ஏற்பட்டதை கண்டறிந்துள்ளனர்.

Advertisment

மேலும் உற்சவர் சிலை முகம், கண்கள், வாய், சங்கு சக்கரம், விரல்கள், இடுப்பு பகுதி சுருங்குவதாகவும் தெரிகிறது. தினமும் திருமஞ்சனம், வானகுளியல் செய்யப்படுவதாலும், திங்கட்கிழமைகளில் சகஸ்ர கலச அபிஷேகம் புதன்கிழமை வசந்தோற்சவம் உள்ளிட்ட சேவைகள் நடைபெறுவதாலும் சிலை இப்படி ஆகி இருக்கலாம் என கூறப்படுகிறது. மேலும் சிலையை பழுது பார்க்க தடை செய்யப்பட்டுள்ள நிலையில் அகமா குழுவினரின் பரிந்துரை குறித்து அடுத்த மாதம் நடைபெறும் திருமலை திருப்பதி தேவஸ்தான கூட்டத்தில் ஆலோசிக்க பட உள்ளதாக அதிகாரிகள் தகவல் வெளியாகியுள்ளன.

Tirupati
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe